அதிமுக பொதுக்கூட்டத்தில் பரவசம்... பக்தி பாட்டு பாடியதால் சாமியாடிய பெண்கள்!
Recommended Video

திருவண்ணாமலை : அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் விதமாக திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தலைமைக்கழக பேச்சாளர் பக்திப் பாடலை மேடையில் பாட கூட்டத்தில் இருந்த பெண்கள் சிலர் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கானத்தூர் கிராமத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தின் தொடக்கமாக அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் செல்வராஜ் மைக்கை பிடித்து பக்திப் பாடலை பாடினார்.

செல்வராஜின் பக்திப் பாடலுக்கு ஏற்ப ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இசைக்கருவிகளை இயக்க கூட்டத்தில் இருந்த சில பெண்கள் திடீரென சாமியாடத் தொடங்கினர். சாமியாடிய பெண்களை அருகில் இருந்தவர்கள் கட்டுப்படுத்த முயன்றும் முடியாததால் அவர்கள் சிறிது நேரம் பக்திப் பாடலுக்கு சாமியாட்டம் போட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications