"டவர் டம்ப் அனாலிசிஸ்".. திருவண்ணாமலை கொள்ளையில் போலீஸ் எடுத்த அஸ்திரம்.. சிக்கும் "ஏடிஎம் கேங்க்"
ஆந்திர பிரதேசத்திற்கு இவர்களின் சுமோ சென்றதாக கூறப்படுகிறது. சுமோ ஒன்றில் இவர்கள் பயணம் செய்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர். இதற்காக சைபர் கிரைம் உதவியை போலீசார் நாடி உள்ளனர்.
திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றதிலேயே மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பார்க்கப்படுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் வெறும் 4 கிமீ இடைவெளியில் இருக்கும் 4 ஏடிஎம்களை திருடி உள்ளனர். இதில் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ.3,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில்எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.19,50,000 மற்றும் தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.32,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

கொள்ளை
இந்த கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹரியானாவில் இருந்து வந்து மும்பை, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கொள்ளையடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஹரியானாவிலும் இவர்களின் இருப்பிடம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கே இவர்கள் தப்பி சென்றுவிட்டனரா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அங்கே இருக்கும் போலீசார் உதவியுடன் இந்த விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் பெரும்பாலும் சுங்கசாவடிகளை தவிர்த்துவிட்டு உள்ளூர் வழியாக பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சுங்கச்சாவடி
இவர்கள் கொள்ளையடிக்கப்பட்டது ஆந்திர எல்லைக்கு அருகே என்பதால் எளிதாக ஆந்திராவிற்கு தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆந்திர பிரதேசத்திற்கு இவர்களின் சுமோ சென்றதாக கூறப்படுகிறது. சுமோ ஒன்றில் இவர்கள் பயணம் செய்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. இந்த கொள்ளை தொடர்பாக டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 6 தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. வட இந்திய கும்பல் இந்த கொள்ளையை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர். இதற்காக சைபர் கிரைம் உதவியை போலீசார் நாடி உள்ளனர்.

அஸ்திரம்
டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. அதாவது கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் ஏடிஎம்கள் இருந்த பகுதியில் ஆக்டிவாக இருந்த சிம் கார்டுகள், போன் சிக்னல்களை கண்டுபிடிக்க வேண்டும். அந்த போன்களில் தற்போது இதெல்லாம் தமிழ்நாட்டில் இல்லாமல் ஆந்திர, கர்நாடகா, ஹரியானா போன்ற பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளது. எந்த சிம் அல்லது போன் பயணத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது. இதை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் திட்டத்தில் போலீசார் இறங்கி உள்ளது.

கோலார்
கோலார் தங்க வயல் பகுதியில் கிடைத்த சிக்னலின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 6 பேர் சேர்ந்து இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் கர்நாடகத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் திருவண்ணாமலையில் வாடகை வீடு எடுத்து கடந்த சில மாதங்களாக தங்கி வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. போலீசார் இவர்களை நெருங்கிவிட்டனர், விரைவில் இவர்களை போலீசார் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

உருவங்கள்
மும்பையில் இதே கும்பல் இதற்கு முன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மும்பையில் இதே போன்ற பாணியில் ஏடிஎம் கொள்ளை ஒன்று சில மாதங்களுக்கு முன் நடந்தது. அதில் ஏடிஎம் வெளியே இருந்த சிசிடிவி காட்சி ஒன்று போலீசாரிடம் உள்ளது. அதை தமிழ்நாடு போலீசார் தற்போது வாங்கி உள்ளனர். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதை வைத்து அந்த கொள்ளையர்களின் உருவங்களை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருவண்ணாமலையியில் குடும்பத்தோடு தங்கி இருந்ததாக போலீசார் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications