ஏடிஎம் பவாரியாஸ்! நாடு முழுக்க ஒரே டைப் ஏடிஎம்களை குறி வைத்த கேங்க்! திருவண்ணாமலை கொள்ளை ஷாக் தகவல்!
கொள்ளை கும்பல் மிகப்பெரிய பிளானுடன் கொள்ளை அடிப்பதால் இந்த சம்பவங்கள் மேலும் தொடர வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் புதிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை போலீசார் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தில் நடிப்பில் வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று. தமிழ்நாட்டில் பவாரியா கொள்ளை கும்பல் செய்த திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. உண்மை சம்பவங்களை மையங்களாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கார்த்தி, ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், டெல்லி என்று பல மாநிலங்களுக்கு சென்று பவாரியா கும்பலை பிடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கும். பவாரியா கும்பலின் தலைவன் ஓமாவை கடைசியில் கைது செய்வதோடு படம் முடிந்துவிடும். தமிழ்நாட்டிலும் பல தென்னிந்திய மாநிலங்களிலும் நெடுஞ்சாலையில் இருக்கும் வீடுகளில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. ஒரே மாதிரி ஸ்டைலில் இந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் நடைபெற்றன.

ஏடிஎம் கொள்ளை
இந்த நிலையில்தான் நாடு முழுக்க ஒரு கும்பல் பவாரியா கும்பலை போலவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை 4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. 3 பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம்களில் சோதனை நடைபெற்றது. மேலும் ஒன்இந்தியா ஏடிஎம் ஒன்றிலும் கொள்ளை நடத்தப்பட்டது. ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் சென்று, மையத்தின் கதவை மூடிவிட்டு, கேமராவை மறைத்துவிட்டு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். வெல்டிங் மிஷின் மூலம் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்.

எப்படி நடந்தது?
இந்த கொள்ளையை கொள்ளையர்கள் மிகவும் வித்தியாசமாக மேற்கொண்டு உள்ளனர். போலீஸ் இல்லாத சாலையில் உள்ள ஏடிஎம் சென்று அந்த ஏடிஎம் கதவை மூடி உள்ளனர். பின்னர் உள்ளே சென்று பின் பக்கம் சர்வர் கதவை உடைத்து சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி உள்ளனர். அதன்பின் கேமராவை உடைத்து நொறுக்கி உள்ளனர். பின்னர் ஏடிஎம் மிஷினை பின்னர் வெடிங் மிஷின் வைத்து உடைத்து உள்ளனர். பின்னர் பணத்தை திருடியதும் மிஷினை தீ வைத்து உள்ளனர்.

ஏடிஎம்
வெறும் 4 கிமீ இடைவெளியில் இருக்கும் 4 ஏடிஎம்களை திருடி உள்ளனர். மொத்தமாக 72 லட்சம் ரூபாய் வரை இதில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ.3,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில்எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.19,50,000 மற்றும் தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.32,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 6 தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. வட இந்திய கும்பல் இந்த கொள்ளையை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் புதிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை போலீசார் தற்போது வெளியிட்டு உள்ளனர். கடந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே பாணியில் இவர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொள்ளையர்கள் சென்ற வாகனங்களை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் டிரேஸ் செய்து வருகின்றனர்.

கொள்ளை பின்னணி
ஆந்திர பதிவு எண் கொண்ட சுமோ காரில் இந்த கொள்ளை நடத்தப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து இவர்கள் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்து உள்ளது. அதோடு அலாரம் அடிக்காமல் கொள்ளையடிக்கவும் தெரிந்து உள்ளது. இவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் பயிற்சி பெற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கும்பல் மிகப்பெரிய பிளானுடன் கொள்ளை அடிப்பதால் இந்த சம்பவங்கள் மேலும் தொடர வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications