திருவண்ணாமலை அருகே இப்படியொரு சம்பவம்? அரசு மருத்துவமனையில் ஆடிப்போன பெண்.. யாரந்த 18 வயது மாணவன்?
திருவண்ணாமலை: பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயது மாணவனை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
செல்போன் பயன்பாடு வந்த பிறகு, சோஷியல் மீடியாவை இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.. இதனால், தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.

எனினும் சில பெற்றோர் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பதால், பல சிறுவர், சிறுமிகள் இளம் வயதிலேயே தவறான பாதைக்கு சென்று, பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
17 வயது சிறுவனும், 3 காதலும்
சமீபத்தில்கூட, 17 வயது சிறுவன் ஒருவன், இன்ஸ்டாகிராமில் 3க்கும் மேற்பட்ட சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. இதோ 17 வயது மாணவி, காதல் என்ற போர்வையில் ஏமாந்து கர்ப்பம் தரித்துள்ளார்..
திருவண்ணமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் இந்த 17 வயது மாணவி.. நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்... இவரை சில மாதங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆசை வார்த்தைகள்
பிறகு, மாணவியை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.. ஒருகட்டத்தில் பலவகையான ஆசைவார்த்தைகளை சொல்லி, மாணவியை நேரில் வந்தும் சந்தித்து பேசியிருக்கிறார்.
பிறகு, உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி, மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார்.. கடந்த சில நாட்களாகவே மாணவி உடல் சோர்வாக காணப்பட்டதால், பெற்றோர் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தார்கள்..
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை
பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்தபோதுதான், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அதற்குள் அந்த மாணவன் மாயமாகிவிட்டார்.. இதனால், மாணவனை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications