அட்ஜெஸ்மன்ட் செய்தால் பதவி.. ஆபாச மெசேஜ்.. திருவண்ணாமலை தவெக நிர்வாகி மீது மகளிரணி புகார்
திருவண்ணாமலை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் வேதனையடையும் வகையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக நிர்வாகிகளே அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளர், மகளிரணி பெண்களுக்கு அசிங்கமாக மெசேஜ் அனுப்பி அட்ஜெஸ்மென்ட் செய்ய சொல்வதாக புகார் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை தவெக வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக, அந்த கட்சியின் மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட தவெக பெண்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யா ஒரு பெண்ணுடன் கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். சிசிடிவி வீடியோவை எடுக்கிறோம். அந்த பெண்ணும் தவெக நிர்வாகி தான்.

தவெக மாவட்ட செயலாளர் அத்துமீறி
அவனிடம் அட்ஜெஸ்ட் செய்து போனால் தான் மாவட்ட பதவி வழங்குவேன் என கூறுகிறார். எங்களை பார்த்ததும் அந்த பெண் எழுந்து ஒரு மாதிரி நிற்கிறார். அது அவரவர் விருப்பம். ஆனால் தனக்கு அட்ஜெஸ்ட் செய்பவர்களுக்கு மட்டுமே கட்சி பதவி என சத்யா கடைபிடிக்கிறார். அவர் பேசிய வீடியோ எல்லாம் உள்ளது. நான் உங்களுக்கு அண்ணனாக பாதுகாப்பு வழங்குவேன் என கூறிவிட்டு, தேர்தல் நேரத்தில் சொத்தை எழுதி கொடுக்க சொன்னார்.
கெஞ்சி அழுததால், ஒரு பெண் ரூ.27 லட்சம் மதிப்பிலான சொத்தை எழுதி கொடுத்தார். அவருக்கு சீட் தரவில்லை. ஆனால் சொத்தையும் எழுதி கொடுக்கவில்லை. கட்சிக்காக நாங்கள் என்ன செய்தாலும் நீ ஏன் அதை செய்கிறாய் என தடுக்கிறார். எங்களை எச்சரிக்கிறார். நாடகம் நடத்தி கொண்டே இருக்கிறார். பொதுச்செயலாளர் ஆனந்த் இங்கு வந்திருந்தார். அவரை எதேர்ச்சையாக பார்த்து பேசினோம். அதற்கு கூட அவரிடம் எதுக்கு பேசினீர்கள் என திட்டி அடிக்க வந்தார்.
அசிங்கமான மெசேஜ்
அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். காவல்துறையினரை வரவரழைத்து தப்பித்து சென்றான். அவனால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலர் தற்கொலை எண்ணத்தில் உள்ளனர். அந்த மாவட்ட செயலாளர் ஆரணிக்கே வரக்கூடாது. மகளிர் ஒன்றாக இருந்தால் அவருக்கு பிரச்சனை. அதனால் எங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு, விரோதத்தை பரப்புகிறார். கட்சி மீட்டிங்கில் கூட நிர்வாகிகளை அவர் பேச விடுவதில்லை.
நாங்கள் யாரையும் மதிக்கவில்லை என கூறி புகார் வருவதாக டார்ச்சர் செய்கிறார். மகளிருக்கான சிறப்பான திட்டங்களில் கூட அவர் எங்களை கலந்து கொள்ள வைப்பதில்லை. பெண்களுக்கு அசிங்கமாக மெசேஜ் செய்து, ஒருமையில் வாடி, போடி என பேசுகிறான். பேசுவதை பேசிவிட்டு பிறகு போனில் அழைத்து மன்னிப்பு கேட்பான். அவனை சும்மா விடக்கூடாது. இதைப்பற்றி பொதுச்செயலாளரிடம் கூறிவிட்டோம். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


Click it and Unblock the Notifications
