திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட் வருதா? அரசு பரிசீலிப்பு! வர்த்தகம், முதலீடு, சுற்றுலா அடையாளம் முன்னேறுமே
திருவண்ணாமலை: திருவண்ணாமலை விமான நிலையம் வேண்டும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி இன்று சட்டப்பேரவையில் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்... இதற்கு தமிழக அரசு தெரிவித்துள்ள பதில் என்ன? திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட் வருவது எந்தெந்த வகையில் சாத்தியம்? மத்திய அரசின் அனுமதி லேசில் கிடைக்குமா?
தமிழக சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

திருவண்ணாமலைக்கு விமான நிலையம்
அப்போது, திருவண்ணாமலைக்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்... "திருவண்ணாமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால், உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தேவையான நிதி ஆதாரத்தை கு.பிச்சாண்டி ஏற்பாடு செய்தால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும் என்றார்.
மேலும், திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைப்பது தற்போது 'புரியாத புதிர்' போல இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
கு.பிச்சாண்டி கோரிக்கை
மூத்த தலைவர் பிச்சாண்டி இன்று விடுத்திருக்கும் கோரிக்கையானது, தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. ஒருவேளை திருவண்ணாமலையில் விமான நிலையம் வந்தால், அந்த மாவட்டமும், சுற்றுப்புற கிராமங்களும் பல்வேறு வகையில் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை..
பக்தர்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை விரைவாகவும், எளிதாகவும் திருவண்ணாமலைக்கு வர முடியும்... இதனால் கோயில் மற்றும் சுற்றுலா இடங்களின் வருமானமும் பெருகும், வாழ்வாதாரத்தில் மக்களுக்கு நேரடியான பலனும் கிடைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை..
திருவண்ணாமலைக்கு பிளஸ் பாயிண்ட்ஸ்
அவ்வளவு ஏன், பொருளாதார ரீதியாகவும் புது புது வேலை வாய்ப்புகள் பெருகலாம், ஹோட்டல்கள், சுற்றுலா சேவைகள் வரை துறைகள் முதல் தொழில் முதலீடுகள் வரை அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை..
அதைவிட முக்கியமாக, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களிலிருந்து ஸ்ட்ரைட்டாகவே விமான சேவை கிடைக்கும் என்பதால், நீண்ட தூர பஸ், கார்கள் பயணத்துக்கு அவசியமிருக்காது என்பதிலும் சந்தேகமில்லை...
என்றாலும், மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை.. ஏற்கனவே ஓசூரில் ஏர்போர்ட் அமைப்பதற்கான முயற்சியில் பெரும் பின்னடைவு நமக்கு ஏற்பட்டுள்ளது.. தமிழக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்து ஏமாந்து போய் உள்ளார்கள்..
மத்திய அரசு அனுமதி?
இந்த விமான நிலையம் அமைக்க, பாதுகாப்பு அமைச்சகம் வழங்கும் அனுமதி மிக முக்கியமாகும். ஆனால், மத்திய அரசு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளது.. ஓசூர் .ஏர்போர்ட் விவகாரமே சிக்கலில் உள்ளபோது, திருவண்ணாமலைக்கு விமான நிலையம் அவ்வளவு எளிதாக கொண்டுவரப்படுமா என்பது தெரியவில்லை..
எனினும், திருவண்ணாமலை ஒரு பழமையான ஆன்மீக தலம் என்பதாலும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதாலும், அந்த தேவையை கொண்டு மத்திய அரசு இதற்கான அனுமதியையும் வழங்கவும் வாய்ப்புள்ளது..
ஒப்புதல் கிடைக்குமா?
ஏனென்றால், ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலித்து வருவதாக கடந்த 2021ம் ஆண்டே செய்திகள் வெளியாகியிருந்தன..
திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்க அப்போதைய எம்.பி. அண்ணாதுரை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.. இதற்கு சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் புரி பதிலளிக்கும்போது, "சிறிய நகரங்களிலும் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதே போன்று புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும்" என்று கூறியிருந்தது இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது.
வனப்பகுதி, நிலப்பரப்புகள்
ஒருவேளை திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட் வருவதற்கான சூழல் அமையுமானால், காட்டு, வனம், நிலப்பரப்புகள் பாதிக்கப்படாமல், வாகன போக்குவரத்துக்கும் சிக்கல்கள் இல்லாமல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்..
திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட் வருவதால் சாதகங்கள் அதிகமாக இருந்தாலும்கூட, அதிகாரிகளுடன் மிக தீவிரமாக பரிசீலனை செய்த பிறகே விமான நிலையத்தை அமைக்க வேண்டியிருக்கும்..
எனினும் இன்றைய தினம் சட்டப்பேரவையில் இப்படியொரு கோரிக்கையை மூத்த தலைவர் கு.பிச்சாண்டி வைத்திருப்பது, தமிழக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.. முதல்வருடன் கலந்தாலோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுகுறித்து வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications