திருவண்ணாமலையில் குழந்தைகளுடன் கவுரி.. அதிகாலையில் கோபித்துக் கொண்டு வெளியேறி.. இப்படியா நடக்கனும்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவருடைய மனைவி கவுரி, செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வெங்கடேசன் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வந்தாராம். இதனால் கோபித்துக் கொண்டு அதிகாலையில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய கவுரி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது
குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல.. குடும்பத்திற்கே கேடாக இருக்கிறது. ஒரு தனி மனிதனின் குடிப்பழக்கம், அவரை நம்பியுள்ள மனைவி, குழந்தைகளையும் மோசமாக பாதிக்கிறது. ஏனெனில் குடிப்பழக்கம் உள்ளவர்களில் பலர், தினமும் குடிப்பதால் நடுத்தர வயது வரும்போது, உடல் நிலை மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். சிலர் பிள்ளைகளை காப்பாற்றி கரைசேர்க்க வேண்டிய வயதில் இறந்து போகிறார்கள்..

தவறான முடிவுகள்
இது ஒருபுறம் எனில், குடிப்பழக்கத்தால், தினமும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைகளை அனுபவிக்கும் மனைவி, தவறான முடிவெடுக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. குடிப்பழக்கத்தை கைவிட வைக்க முடியாததால் கணவனை விட்டு பிரிந்து செல்வது நடக்கிறது. ஆனால் சிலர் மிக முட்டாள் தனமாக தன்னையே அழித்துக் கொள்கிறார்கள். அத்துடன் குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் இறந்து போகிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனங்களை ஒருபோதும் செய்யவே கூடாது. எந்த நிலையிலும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவே கூடாது.. அப்படி ஒரு மன நிலை வந்தால் மருத்துவர்களை அணுகலாம். திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலை கூலி தொழிலாளி குடும்பம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுரிக்கு 35 வயது ஆகிறது. இவரும் கூலித்தொழிலாளி ஆவார். கவுரி சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கிஷோர் (5), தேவேஷ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
மது பழக்கம்
கூலி வேலை செய்து வரும் வெங்கடேசன் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மது போதையில் அவர் வீட்டிற்கு வருவாராம். கணவர் மது அருந்துவதை கவுரி கண்டிப்பாராம். இந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கிணற்றில் குழந்தைகளுடன்
இதனால் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கவுரி தனது 2 குழந்தைகளுடன் நேற்று அதிகாலையில் சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார். பின்னர் குழந்தைகளுடன் குதித்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கவுரி மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications