நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையானே! கோலாகலமாக தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா! உலா வந்த நமசிவாயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோலாகலமாக தொடங்கியது. பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த நிலையில், மாடவீதியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற தளமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்ற உற்சவம் இன்று காலை 06.52 மணிக்கு உத்திராடம் நட்சத்திரம் விருச்சிக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
முன்னதாக இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

அருணாச்சலேஸ்வரர் கோவில்
அதனைத் தொடர்ந்து அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன் பராசக்தி அம்மன் சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்தி களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழா
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தை வளம் வந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தின் முன்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது பஞ்ச மூர்த்திகள் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பாக உள்ள பதினாறுங்கால் மண்டபத்தில் வெள்ளி விமானத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்தி களுக்கு தீபாராதனை நடைபெற்றது.
சிவனடியார்கள்
அதனைத் தொடர்ந்து முதன் முதல் கடவுளான விநாயகர் முன்னே செல்ல பஞ்ச மூர்த்திகள் மாடவீதி விழா நடைபெற்று வருகிறது. மாடவீதியில் சிவனடியார்கள் ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பஞ்சமூர்த்திகளை வணங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அண்ணாமலையார்
அதனைத் தொடர்ந்து விநாயகர் முருகர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் பராசக்தி அம்மன் சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா தற்போது நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி மாட வீதி உலாவின் போது பஞ்ச மூர்த்திகளுக்கு முன்னால் முதன்முதல் கடவுளான யானை முன்னாள் செல்வது வழக்கம்.
நமசிவாயம்
கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திகை தீபத் திருவிழாவில் பஞ்ச மூர்த்தி களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் இருந்து வந்த 8 வயதான நமச்சிவாயம் முன்னே செல்ல சிவனடியார்கள் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் மாத வீதி உலா நடைபெற்றது. வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானையை ஆவலோடு பார்த்து மகிழ்ந்தனர்.
கோவில் யானை
சிறியவர்கள் முதல் வயதானவர்கள் ஏன் காவல்துறையினர் கூட யானையோடு நின்று செல்பி எடுப்பது யானையை வீடியோ எடுப்பது என்று யானை பின்னால் சென்றனர். பொதுவாக கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மாட வீதி உலாவின் போது சாமியின் அருகில் கயிறு கட்டி வலையத்திற்குள் யாரையும் விடாமல் பார்த்துக் கொள்வார்கள். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கார்த்திகை தீபத் திருவிழாவில் முதல் நாள் திருவிழாவில் மாடவீதியை வளம் வந்த நமச்சிவாயத்தை கயிறு கட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்றனர்.



Click it and Unblock the Notifications
