திருவண்ணாமலையில் போராடி மீட்கப்பட்ட பஞ்சமி நிலம்.. செங்கொடியுடன் விவசாயத்தில் இறங்கிய தலித் மக்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் வரை பஞ்சமி நிலங்கள் இருப்பதாகவும், அதை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரி வந்தது. இந்நிலையில் 'பஞ்சமி' நிலத்தில் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி கொடியுடன் குடியேறி, நிலத்தை உழுதுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்.30ம் தேதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இப்படி இருக்கையில், இந்த ஆண்டு நினைவு தினத்தன்று பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தீண்டாமை சுவர் அகற்றுதல், மயானத்திற்கு பாதை கேட்டு போராட்டம், தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி போராட்டம், பஞ்சமி நில மீட்பு போராட்டம் போன்றவற்றை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்தது.
திருவண்ணாமலையில், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணத்தில் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு உழுது பட்டியலின பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.
ஏற்கெனவே பஞ்சமி நிலம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து தலித் மக்கள் பஞ்சமி நிலத்தில் குடியேறியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி கொடியை நட்டு வைத்து விவசாயத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர். போராட்டத்தையடுத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது.
பஞ்சமி நிலம் என்றால் என்ன?: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் பண்ணையார்களின் கைகளில் குவிந்து கிடந்தது. இப்படி குவிந்து கிடந்தது 10, 100 ஏக்கர் கிடையாது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் நிலம் இருந்தது. நிலம் இருந்தால் மட்டும் போதுமா? அதில் இறங்கி வேலை செய்தால்தானே சாகுபடி கிடைக்கும், பணம் வரும். ஆனால் பண்ணையார்கள் வேலை செய்யமாட்டார்கள். இதற்காக தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
ஒரு வேளை கஞ்சிக்காக நாள் முழுக்க நிலத்தில் வேலை செய்தனர். அதே நிலத்தில் செத்தும் போனார்கள். இவர்கள்தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த பஞ்சமர்களின் வாழ்க்கை இப்படியே முடிந்து போவதா? பஞ்சமர்களின் உயிருக்கு ஒரு படி அரிசி தான் மதிப்பா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதில் முக்கியமானவர்தான் அயோத்திதாசர். அதேபோல கிறிஸ்தவ மிஷனரி சங்கத்தை சேர்ந்த ஆடம் ஆண்ட்ரு உள்ளிட்டோரும் குரல் எழுப்பினர்.
இது ஆங்கிலேயர்களின் கவனத்திற்கு சென்றது. நியாயத்தை உணர்ந்த சில ஆங்கிலேய அதிகாரிகளும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பஞ்சமர்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இப்படியாக பஞ்சமி நிலம் என்று ஒதுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என ஒதுக்கப்பட்டன. இந்த நிலங்கள் பட்டியலின மக்களுக்கு சொந்தமானதாகும். இதை விற்க முடியாது. அதாவது முதல் 10 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை யாரிடமும் விற்க முடியாது. பின்னர் தங்கள் சமூகத்தை சேர்ந்தவரிடம் விற்கவோ, குத்தகை விடவோ செய்யலாம்.
மீறி வெளியாட்களுக்கு விற்கப்படும் பட்சத்தில், அது அரசாங்கத்திற்கு சொந்தமானதாக கருதப்படும். இதற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படமாட்டாது. ஆனால் இலவசப் பஞ்சமி நிலங்கள் காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு மாறாகப் பிற சமூகத்தினருக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாகத் தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று பஞ்சமி நிலத்திற்காக தலித் இயக்கங்கள் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன. இதில் சில ஆயிரம் மட்டுமே தலித் மக்கள் கைகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை யார் அனுபவித்து வருகிறார்கள்? அதை மீட்டு ஏன் தலித் மக்களுக்கு அரசு கொடுக்கவில்லை என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications