'ஒன்சைடு ஆனந்த்'.. விஜய் படத்தை, கட்சி கொடியை உடைத்து வீசிய திருவண்ணாமலை தவெக நிர்வாகி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: 13 வருசமாக விஜய் மீது உயிரையே வைச்சிருந்தேன் இனிமேல் இந்த கட்சி வேண்டாம்" என்று கூறி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த தவெக உறுப்பினர் ஹரிஷ் கட்சியை விட்டு வெளியேறினார். தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சித்த ஹரிஷ், புஸ்ஸி ஆனந்தின் பெயரை மாற்றுங்கள் என்றும், அவர் ஒன்சைடு ஆனந்த் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் தனது காரில் இருந்து தவெக கொடியை கழற்றி வீசிய வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளார் கட்சியின் கட்டமைப்பை பலமாக்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை கடந்த பிப்ரவரி மாதம் முன் வைத்தனர். பதவி கிடைக்காத பலர், புஸ்ஸி ஆனந்த் பணம் வாங்கி கொண்டு பதவி அளிப்பதாக கூட குற்றம்சாட்டினார்கள்.

Tiruvannamalai TVK executive who broke the party flag and threw away Vijay s photo

அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஹரிஷ், கட்சியினரை நாய் மாதிரி நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். ஹரிஷ் கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட வீடியோவில், தலைவர் விஜய் சுற்றி தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுச்செயலாளர் ஆனந்த்-ஐ 100 சதவிகிதம் நம்புகிறார் விஜய். ஆனால் விஜய்-க்கு பொதுச்செயலாளர் ஆனந்த் விஸ்வாசமாக இல்லை. பணம், சாதி, விஸ்வாசம் ஆகிய 3 விஷயங்களை அடிப்படையாக வைத்தே பதவி அளிக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது விஜய்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்கள் அல்ல. பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு தான் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை ஆரணி பகுதியில் 15 பேருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அதிமுக நிர்வாகி ஒருவரின் மகனான சத்யா என்பவருக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியில் இணைந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவர் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வந்து தவெகவில் இணைந்தவர். அவருக்கு எதற்காக பதவி அளிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனை புஸ்ஸி ஆனந்த் அப்போது மறுத்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி கடந்த மூன்று நாட்கள் முன்பு வடக்கு மாவட்ட செயலர் சத்தியா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றார்கள். அப்போது, ஆரணியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஹரிஸ்(45), திடீரென அங்கு வந்து தான் விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருந்து வருவதாகவும், எனக்கு எதற்கு நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

அப்போது, ஊர்வலமாக சென்ற தவெக கட்சி மாவட்ட செயலாளரை திடீரென தடுத்து நிறுத்தி பேசியபோது, ஹரிஸ் தள்ளிவிடப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஹரிஸ்சிடம் பேச்சு நடத்தினர். பின்னர் நீண்ட நேரத்திற்கு ஹரிஷ் அங்கிருந்த சென்றார்.

தொடர்ந்து, ஹரிஸ் கூறுகையில், நான் தவெக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக விஜயின் மக்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றேன். கடந்த வருடம் விஜய் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கினேன். கள்ளகுறிச்சி கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க தலைமையில் இருந்து அறிவிப்பு . அதனால், நாங்கள் எல்லம் சேர்ந்து இளைஞர் அணி சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கியிருக்கிறேன்.

ஆனால், கட்சியில் நடக்கும் தவறுகளை கேட்டால், கட்சிக்கு முரணாக நடப்பதாக கூறுகிறார்கள். நான் கட்சி தலைமைக்கும், மாவட்ட அலுவலகத்திற்கு சென்றால் ஹரிஸ் என என் பெயரை கேட்டாலே, கேட்டை மூடிவிடுகிறார்கள். எங்களுக்கு தலைவரு விஜய் சார்தான். நான் ஏன் எதற்கு ஆன்ந்த் சார் காலில் விழவேண்டும். கட்சியில உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும், அதைவிட்டு யாரு அவர்கள் விசுவாசி யாகவும், பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்து என்னை போன்று கட்சியில் உழைப்பவர்களை, செய்யாரிலிருந்து வந்துள்ள மாவட்ட செயலாளர் என்னை ஓதுக்கி வைத்து, சாதி ரீதியாக தன்னை தனிமைப்படுத்தி கட்சி பணியை செய்யாமல் தடுத்து வருகிறார் என்று அப்போது ஹரிஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில் தவெக நிர்வாகி ஹரிஷ் : 13 வருசமா உயிரையே வைச்சிருந்தேன் இனிமேல் இந்த கட்சி வேண்டாம்" என்று கூறி கட்சியை விட்டு வெளியேறினார். தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சித்த அந்த தொண்டர், புஸ்ஸிஆனந்த் பெயரை மாற்றுங்கள் என்றும் அவர் ஒன்சைடு ஆனந்த் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் தனது காரில் இருந்து தவெக கொடியை கழற்றி வீசிய வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+