திருவண்ணாமலையில் ஆச்சரியம்.. உண்ணாமலை அம்மன் கோயிலில் "ரேஷன்" புடவையுடன் யார்னு பாருங்க? அடக்கடவுளே

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதுகுறித்த விளக்கம் ஒன்றும் கோயில் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.. என்ன நடந்தது?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததென்றால், ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளுமே சிறப்பு பெற்றவையாகும்.. குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி பெளர்ணமி, ஆடி அமாவாசை என ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

tiruvannamalai ration shop saree

ஆடி மாதம்: அந்தவகையில், கடந்த வாரம் ஆடி மாதம் பிறந்தது.. 3 நாட்களுக்கு முன்பு ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காரணம், ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது..

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் முழு முதற்கடவுள் என கூறப்படும் விநாயகரை வழிபடுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.. எனவேதான், ஆடி மாத பௌர்ணமியில் சிவபெருமானுடன், விநாயகரையும் சேர்த்து வழிபடுவது தனிச்சிறப்பாக உள்ளது. இந்த முறை, ஆடி வெள்ளி, பௌர்ணமி என்று அடுத்தடுத்து சிறப்பு வாய்ந்த நாட்கள் வந்ததாலும், வார விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்..

சிறப்பு தரிசனம்: கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.. பிறகு, சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். இடைவிடாமல் சுமார் 15 மணி நேரம் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்..

இந்நிலையில், பவுர்ணமி தினத்தில், அண்ணாமலை கோயிலில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. அதாவது, பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டிருந்ததாம்.

ரேஷன் புடவை: இதுகுறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்துவிட்ட நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி இதுகுறித்து விளக்கம் தந்துள்ளார்.

அதில், "திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினார்கள்.. இதில் பக்தர் ஒருவர், ரேஷன் சேலையை வழங்கியிருக்கிறார்.. பவுர்ணமியின்போது அம்மன் சிலைக்கு அந்த ரேஷன் கடை சேலை அணிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தெரியவந்ததுமே, உடனடியாக அந்த சேலை மாற்றப்பட்டுவிட்டது" என்றார்.

எனினும், திருவண்ணாமலை கோயில் அம்மன் சிலைக்கு, ரேஷன் சிலையை கட்டிவிட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. அம்மன் ரேஷன் புடவையை கட்டியிருந்த இந்த போட்டோதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+