திருவண்ணாமலை கிணற்றில் எட்டிப்பார்த்த போலீஸ்.. நம்பவே முடியாத சம்பவம்.. ரோஷினிக்கு வந்த போலீஸ் ஆசை
திருவண்ணாமலை: போலீஸாக வேண்டும் என்பது ரோஷினியின் ஆசையாக இருந்துள்ளது.. அதேபோல, சக்திவேலும் போலீஸ் பணியில் சேர ஆசைப்பட்டுள்ளார்.. இதையடுத்து, ரோஷினி, சக்திவேல் இருவருமே, போலீஸாக ஆசைப்பட்டு டிரெயினிங்கில் சேர்ந்துள்ளனர். ஆனால், இருவரின் வாழ்வுமே இன்று பாழாகிவிட்டது. என்ன நடந்தது திருவண்ணாமலையில்?
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்துள்ளது பாடகம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ரோஷினி.. 21 வயதாகிறது.. இவருக்கு போலீஸ் பணியில் சேர வேண்டும் என்று விருப்பமாம்.

அதனால், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் பணியில் சேருவதற்காக, தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.. இதே பயிற்சி மையத்தில் சக்திவேல் என்ற 29 வயது இளைஞரும் படித்து வருகிறார். இவர், அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்.
ஒரே பயிற்சி மையம்
ஒரே பயிற்சி மையம் என்பதால், இருவரும் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.. இந்நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு பயிற்சி மையத்திலிருந்து ரோஷினியும், சக்திவேலும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.. பாடகம்-மன்சூராபாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருவருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேல், ரோஷினியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அத்துடன், அங்கிருந்த கிணற்றிலும் தள்ளிவிட்டதாக தெரிகிறது. பிறகு நள்ளிரவில் போளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார்.
வாக்குமூலம் தந்த சக்திவேல்
அப்போது போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில், "நானும் ரோஷினியும் காதலித்து வந்தோம். அவருக்கு, அவரது வீட்டில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் வரன் பார்க்க துவங்கினார்கள்.. இதை கேள்விப்பட்ட நான், "உடனே நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்" என்று ரோஷினியிடம் சொன்னேன். ஆனால் ரோஷினி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால்தான், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், ரோஷினியை கன்னத்தில் அறைந்தேன். இதனால் ரோஷினி, அங்கிருந்த கிணற்றில் குதித்துவிட்டார்" என்றார்.. ரோஷினி, சக்திவேல் இருவருக்கும் தகராறு நடந்த இடமும், ரோஷினி கிணற்றில் குதித்த இடமும் மங்கலம் ஸ்டேஷனுக்கு உட்பட்டது என்பதால், போளூர் போலீசார், மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிணற்றில் எட்டிப்பார்த்த போலீஸ்
இதையடுத்து, மங்கலம் போலீசார், சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றார்கள்.. சக்திவேல் குறிப்பிட்ட கிணற்றில் எட்டிப்பார்த்த போது, ரோஷினி கிணற்றில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தந்து வரவழைத்த போலீசார், அவர்களது உதவியுடன் ரோஷினியின் சடலத்தை மீட்டனர்.
சடலத்தை ஆய்வு செய்தபோது, ரோஷினியின் தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது.. எனவே, ரோஷினியை தாக்கி சக்திவேல் கொலை செய்துவிட்டு கிணற்றில் தள்ளியிருக்கக்கூடும் அல்லது கொடூரமாக தாக்கி கிணற்றில் தள்ளி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பரபரப்பு - அதிர்ச்சி
எனவே, ரோஷினியின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், உண்மை தெரிய வரும் என்று கூறியுள்ள போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸாக வேண்டி ஆசைப்பட்டு படித்த காதலர்களின் வாழ்க்கை இன்று பாழாகிவிட்டது.. இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications