திருவண்ணாமலை கோவில் திருவிழாவில் சிரித்துக் கொண்டே வந்த சென்னை ஐடி ஊழியர்.. நடந்த பெரிய சம்பவம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை உற்சவ விழா கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடந்தது. அப்போது ஒரு தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகே சாமி ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் சென்னை ஐடி ஊழியருக்கு நடந்தது.
கோயில் ஊர்வலங்கள், சாமி ஊர்வலங்கள் மற்றும் பல்வேறு ஊர்வலர்கள் தெருக்களில் நடைபெறும் போது மின் கம்பங்கள் தட்டுகிறதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் மின்சார வயர்களில் உரசி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சிலர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஊர்வலங்கள் நடைபெறும் பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது. அப்படியான சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை உற்சவ விழா கடந்த பிப்ரவரி 26ம் தேதி அன்று நடந்தது. இரவில் பூ பல்லக்கில் சாமி ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. திருவள்ளுவர் தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகே சாமி ஊர்வலம் வந்திருக்கிறது.
அப்போது ஊர்வலம் வந்தவர்கள் திடீரென டிரான்ஸ்பார்மர் மீது படாமல் இருப்பதற்காக பூ பல்லக்கை திருப்பி உள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக டிரான்ஸ்பார்மர் மீது பூப்பல்லக்கு உரசியதாக கூறப்படுகிறது. இதில் அருகில் நின்றிருந்த சேத்துப்பட்டை அடுத்த பழம்பேட்டையை சேர்ந்த செல்வமணி (வயது 53), அவரது மகன் கிஷோர் (20) மற்றும் அருணகிரி (40), சுரேஷ்பாபு (32) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியரான கிஷோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செல்வமணி, அருணகிரி ஆகியோர் மட்டும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் மயான கொள்ளை திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மின்சாரம் தாக்கி சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications