ஓவர் ஆக்டிங்..சிக்கிய ஒத்தரோசா! கணவரை போட்டு தள்ள 10 லட்சம் பேரம்! அட்வான்ஸ் வாங்கிய பாஜக பிரமுகர்!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவியே கள்ளக் காதலுடன் இணைந்து கூலிபடையை ஏவி தன் கணவனை கழுத்து நெரித்து கொலை செய்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப் படையை சேர்ந்த பாஜக பிரமுகர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் மகன் வெற்றிவேல். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேலுக்கும் ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
தம்பதியினருக்கு ஒரு மகளும், 2 மகன்களுடன் ஆரணி டவுன் தேனருவி நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
இதன் காரணமாக கணவரை பிரிந்து தன்னுடைய அம்மா வீடான ஓண்ணுபுரம் கிராமத்தில் ரேவதி தனது குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிவேல் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதனையடுத்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மனைவி ரேவதியே வெற்றிவேலை அழைத்து சென்று சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ரேவதியே வெற்றிவேலை அழைத்து சென்று சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

திடீர் மயக்கம்
மேலும் நேற்று விடியற்காலை திடிரென ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் மயக்கநிலையில் உள்ளதாக வெற்றிவேலின் உறவினர்களுக்கு ரேவதி கூறியுள்ளார். உடனடியாக வெற்றிவேலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே இறந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி ரேவதியிடம் கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

கள்ளக் காதலால் கொலை
விசாரணையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர்
பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் எனபவருடன் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த கணவர் வெற்றிவேல் அடிக்கடி கணவன் மனையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கூலிபடையை ஏவி தனது கணவனை கொலை செய்ய ரேவதி திட்டுமிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதலே தன்னுடைய கணவனை கூலி படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் ராஜேஷ் என்பவரை அணுகி 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

பாஜக பிரமுகர்
மேலும் தற்போது விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கணவன் தன் குடும்பத்தடன் தனியாக இருப்பதை பயன்படுத்தி மனைவி ரேவதி தன் கள்ளகாதலன் நாகராஜ் மற்றும் கூலிபடையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை நேற்று விடியற்காலையில் வீட்டிற்கு வரவழைத்து
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேலின் கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தியுள்ளார். பின்னர் கணவனின் கால்களை மனைவி ரேவதி பிடித்து கொண்ட போது கூலிபடையை சேர்ந்த ராஜேஷ் வெற்றிவேலின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

திருவண்ணாமலையில் அதிர்ச்சி
இதனையடுத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கூலிபடையை ஏவி கொலை செய்த மனைவி ரேவதி, இதற்கு உடந்தையாக இருந்த கள்ளகாதலன் நாகராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் கூலிபடையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். ஆரணியில் தன் கணவனையே கூலிபடையை ஏவி கொலை செய்த மனைவி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications