Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக ஆட்சியை அகற்ற ஸ்டாலின் அரைகூவல்.. இந்தியாவின் எதிர்காலத்திற்கே கேடு என ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கக் கூடிய பொறுப்பை ஏற்று அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கியிருக்கிறது. நாட்டை மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இந்தியாவின் எதிர்காலத்திற்கும் கேடாக போய் முடியும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த பிறகு முதல்வர் மு.க ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். மீண்டும் பாஜகவை ஆள அனுமதித்தால் நாட்டின் எதிர்காலத்திற்கு கேடாக முடியும் எனவும் சாடினார். முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-

Allowing BJP to rule the country again could be bad for Indias future: TN CM MK Stalin Slams

இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் ஆளுமையாக இருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதனால் தான் அவர் புகழை போற்றுவதற்காக பீகாரிலிருந்து தேஜஸ்வி யாதவ் அவர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய பொறுப்பை ஏற்று, அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கியிருக்கிறது. வரும் 23ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.

இந்தியாவுடைய தொன்மையான நகரங்களில் ஒன்று பாடலிபுத்திரம். அது வரலாற்றிலே இன்றைக்கும் அழைக்கப்படக்கூடிய ஒரு நகரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் இன்றைய பாட்னா. அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாக சொல்லப்பட்ட நகரம் அது. ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு.. சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ என்று சொன்னவர் தலைவர் கலைஞர். பாஜக கடந்த 10 ஆண்டு காலமாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கு எல்லாம் இருக்கிறது.

அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை மாண்புமிகு நிதிஷ் குமார் அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். நானும் பாட்னா செல்கிறேன். உங்கள் அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன். கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் 3000, 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும்.

கலைஞருடைய உயிரினும் உயிரான உடன்பிறப்புகள் இதை செய்யாவிட்டால் வேறு யாராலும் இதை செய்ய முடியாது. மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது, தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் கேடாக போய் முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒரு முகமாக இருந்து செயல்படுகிறோமோ செயல்பட்டு வெற்றியை பெறுகிறோமோ அத்தகைய செயல்பாடும், ஒருங்கிணைப்பும், அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும்.

வெற்றி வேண்டும்.. வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும்.. அதற்கு முன்னோட்டம் பீகார் மாநிலத்தில் அமையவிருக்கிறது. கலைஞரின் உடன்பிறப்புகளே, நாம் ஒரு தாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி கலைஞர் கனவுகளை நிறைவேற்றுவோம். கலைஞருக்கு நான் மட்டும் மகன் அல்ல.. நீங்கள் அனைவரும் கலைஞருடைய பிள்ளைகள் தான். கொள்கைவாதிகள் தான். கொள்கை வாரிசுகள் தான். அடக்குமுறைக்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுமைக்கும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம். 40ம் நமதே, நாடும் நமதே. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+