விஜய் தலைக்கு மேல் கத்தி தொங்குது? தவெக ஆட்சி 5 வருஷம் தாங்குமானு தெரியல! பகீர் கிளப்பும் ’தோழர்’

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்று தெரியவில்லை அதே நேரத்தில் தற்போது தவெக ஆட்சிக்கு ஆபத்து இல்லை எனவும், தவெகவிற்கு அன்றைய தேவையில் ஆதரவு கொடுக்கப்பட்டது. அதற்கு எப்போதும் ஆதரவு என அர்த்தம் இல்லை என சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சியின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Balakrishnan CPM Vijay

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்," தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளது.

பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என தமிழக முதல்வர் கூறுகிறார். கொள்கை எதிரி என கூறிவிட்டு சும்மா இருந்தால் போதுமா? அதே நேரத்தில் ஞானேஷ்குமாரை கண்டித்து இதுவரை ஒரு வார்த்தை கூட தமிழக முதல்வர் விஜய் பேசவில்லை. கொள்கை எதிரி என்று எழுத்தில் எழுதி வைத்துவிட்டால் போதுமா? நாளை முதல் நாடு முழுவதும் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்.

தவெகவிற்கு அன்றைய தேவையில் ஆதரவு கொடுக்கப்பட்டது. அதற்கு எப்போதும் ஆதரவு என அர்த்தம் இல்லை. மீண்டும் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு வரும்போது ஆதரவு கொடுப்பது குறித்து யோசிக்கப்படும். தவெகவுடன் ஏற்கனவே ஒரு கூட்டணி உள்ளது. புதிதாக பாமக சேர்ந்தால் விசிகவின் நிலை என்ன? விசிகவையும் பாமகவையும் ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள தமிழக வெற்றி கழகத்தால் முடியுமா?

தற்போதைய சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி உடனடியாக கவிழ்ந்து விடும் என்ற நிலைமை தற்போது இல்லை. ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தற்போது ஆட்சிக்கு ஆபத்து இல்லை. என தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், திடீர் திருப்பமாக தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர. திமுக தவெக, அதிமுக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், 5வது முனை போட்டியாக கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கி உள்ளன.

ஆட்சிக்கு எதிரான மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கி உள்ளதாகவும் சொல்கின்றனர். இது விஜய் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

தற்போது இடைத்தேர்தலிலும் போட்டியிடும் நிலையில், கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள், இந்நாள் தலைவர்கள் தொடர்ந்து முதல்வர் விஜயை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது ஆட்சி கவிழும் என்ற வகையில் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+