எங்க ஊருக்கு தண்ணி வந்துடுச்சு.. யாருப்பா அது.. காலாட்டிட்டே கால்வாய் மேல உக்காந்திருக்கிறது..!
மன்னார்குடியில் தண்ணி வந்துடுச்சு என்று டிஆர்பி ராஜா ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
மன்னார்குடி: "எங்க ஊருக்கு தண்ணி வந்துடுச்சு" என்று ட்வீட் பதிவிட்டதுடன்.. தன் ஒத்த காலை ஆட்டிக் கொண்டே, இன்னொரு கையில் செல்போன் பேசியபடி பாலத்தில் உட்கார்ந்திருக்கும் எம்எல்ஏ டிஆர்பி ராஜாவின் போட்டோ வைரலாகி வருகிறது.
தண்ணியை திறந்து விடுங்க என்று அடிக்கடி கேட்டு ஆர்ப்பாட்டத்தை கையில் எடுப்பவர்கள் மன்னார்குடிவாசிகள்தான்.

விவசாயம் பொய்த்து போகிறது, குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.. பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், வடிகாலை தூர் வார வேண்டும்.. என்பன உட்பட எத்தனையோ கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மன்னார்குடி விவசாயிகள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
இதில் திமுக சார்பாக விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர் எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆவார். இந்நிலையில், மன்னார்குடியில் தண்ணீர் வந்துவிட்டதாம். இதை டிஆர்பி ராஜாவே தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதுவும் தண்ணீர் ஓடும் பாலத்துக்கு மேல உட்கார்ந்து கொண்டு இதை தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், சிறிய பாலம் போல இருக்கிறது. அதற்கு அடியில் தண்ணீர் சலசலவென ஓடுகிறது. பாலம் மேல் உள்ள திட்டில் உட்கார்ந்து கொண்டுள்ளார் டிஆர்பி ராஜா. ஒரு காலை ஆட்டிக் கொண்டே, கையில் செல்போனுடன் கேஷூவலாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த போட்டோவை போட்டு, "எங்க ஊருக்கு #தண்ணி வந்துடுச்சு" என்றும் பதிவிட்டுள்ளார்.
எங்க ஊருக்கு #தண்ணி வந்துடுச்சு 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥺 #Thalikottai #Mannargudi #மன்னார்குடி #காவிரி #டெல்டா #Delta #Cauvery pic.twitter.com/lJPWxYajGg
— T R B Rajaa (@TRBRajaa) September 24, 2019
ஒரு எம்எல்ஏ என்றால் இந்த இந்த வேலைகளைதான் செய்யணும், இப்படித்தான் பொதுவெளியில் நடந்து கொள்ள வேண்டும், இப்படித்தான் ட்வீட் போட வேண்டும், என்ற வழக்கமான பாணியெல்லாம் இவரிடம் எப்போதுமே இருப்பது இல்லை. தன் வழி தனி வழியென்றே ஒவ்வொரு காரியத்திலும் இவர் இறங்கி செய்வதால்தான் தொகுதி மக்களிடம் தினந்தோறும் ஏதாவது ஒரு ரூபத்தில் பேசப்பட்டு வருகிறார இந்த ராஜா!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications