திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! 49 இடங்களில் சோதனை! போலீஸ் குவிப்பு

Google Oneindia Tamil News

திருவாரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Recommended Video

    ADMK முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை... என்ன காரணம்? *Politics

    அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் பெற்றுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறார்.

    ஜூலை 11ம் தேதி இதற்காக பொதுக்குழுவை கூட்ட அவர் முயன்று வருகிறார். அதே சமயம் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக சட்ட போராட்டங்களை ஓ பன்னீர்செல்வம் முன்னெடுத்துள்ளார்.

    இது என்னிக்கு வாங்கின கறி?.. இதை நீ சாப்பிடுவியா?.. அசைவ ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை ரெய்டுஇது என்னிக்கு வாங்கின கறி?.. இதை நீ சாப்பிடுவியா?.. அசைவ ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை ரெய்டு

     ரெய்டு

    ரெய்டு

    இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு அணியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி பதவி ஏற்றத்தில் இருந்து முந்தைய ஆட்சியில் ஊழல் புகாரில் சிக்கியவர்களையும், முறைகேட்டு புகாரில் சிக்கியவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைக்க தொடங்கி உள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை

    லஞ்ச ஒழிப்புத்துறை

    முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள். முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    காமராஜ்

    காமராஜ்

    இந்த நிலையில்தான் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருகிறது. ரெய்டை தொடர்ந்து காமராஜின் ஆதரவாளர்கள் வீடு முன் கூடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    சொத்துகுவிப்பு

    சொத்துகுவிப்பு

    இதையடுத்து ரெய்டு நடக்கும் இடங்களில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் 2028 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து இருந்தது. அதிகாரிகளுடன் கூட்டுசேர்ந்து பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் உள்ளது. இந்த புகாரை அடுத்தே தற்போது காமராஜூக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கிறது.

    English summary
    DVAC raids in AIADMK former minister Kamaraj house and premises in Tamil Nadu. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X