Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களிடம் ரூபே ஏடிஎம் கார்டு இருந்தால்.. 3 லட்சம் கிடைக்கும்.. வங்கிக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்களுக்கு காப்பீடு தொகையாக ஐந்து லட்சம் வரை பெற முடியும். இது தொடர்பாக விதிகளும் உள்ளன. முக்கியமான நிபந்தனையாக அவர் தான் வாழ்நாளின் கடைசி 30 நாட்களுக்குள் (முன்பு 45 நாட்கள்) 'ரூபே கார்டை' பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனையாக உள்ளது. திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பினை இந்த பதிவில் பார்ப்போம்.

காப்பீடுகள் இன்று பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. விபத்து காப்பீட்டை பொறுத்தவரை ஒருவருக்கு வங்கி கணக்கு இருந்தாலே கிடைக்கிறது. ஏடிஎம் கார்டுகளை வழங்கும் வங்கிகள் காப்பீடுகளை வழங்குகின்றன. அந்த காப்பீடுகள் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் போதே, கூடவே வழங்கப்படுகின்றன. வங்கிகள் விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவற்றையும் சேர்த்து அளிக்கிறது.

If you have a RuPay ATM card you will get Rs 3 lakh Thiruvarur Court orders bank over insurance

ஏடிஎம் கார்டு காப்பீடுகள்

இதன் மூலமாக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் விபத்தில் நிரந்தர முடக்கம் அடைந்தால் அல்லது இறந்து போனால், காப்பீட்டு கோரி அவரது நாமினி விண்ணப்பிக்கலாம். கிளாசிக் ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்கள் ரூ 1 லட்சம் வரையும், பிளாட்டினமில் 2 லட்சம் ரூபாய் வரையும், சாதாரண மாஸ்டர் கார்டு என்றால் ரூ 50 ஆயிரம் வரை காப்பீட்டுத் தொகையை பெற முடியும். பிளாட்டினம் மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர் என்றால் ரூ.5 லட்சம் வரையிலும், விசா கார்டு என்றால் ஒன்றரை முதல் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையை நாமினி பெறுவார்.

ஏடிஎம் காப்பீடு எப்படி பெறுவது

கார்டுதாரரின் நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று காப்பீட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏடிஎம் கார்டின் இலவச காப்பீட்டை விபத்தின் எப்ஐஆர் நகல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து காப்பீடு பெற விண்ணப்பிக்க முடியும். இதுதான் நடைமுறையாகும்.

திருவாரூர் பாண்டியன்

இந்நிலையில், திருவாரூர் அருகே குளிக்கரை கீழத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் . இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி அன்று சாலை விபத்தில் இறந்து விட்டார். மனைவி நீலாவுக்கு 45 வயது ஆகிறது.. விபத்து நடப்பதற்கு முன்பு பாண்டியன், திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்.

ரூபே பிளாட்டினம் கார்டு

அதற்காக அந்த வங்கி அவருக்கு 'ரூபே பிளாட்டினம்' என்ற டெபிட் கார்டு வழங்கியிருந்தது. அந்த கார்டு 2021 டிசம்பர் முதல் 2026 டிசம்பர் வரை பயன்படுத்த கூடியதாக ரூபே கார்டு இருந்தது. ரூபே கார்டு விதிமுறைகளின்படி அதனைப் பயன்படுத்தும் நபர் பயன்படுத்தும் காலத்தில் இறந்து விட்டால் ரூ.5 லட்சம் வரை நஷ்ட ஈடாக பெற முடியும்.. ஆனால் அதற்கு முக்கியமான நிபந்தனையாக இறப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பாக 'ரூபே கார்டை' பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்பதாகும்.

30 நாட்களாக விதிமுறை குறைப்பு

பாண்டியன் கடைசியாக ஜூன் மாதம் 9-ந் தேதி அன்று அதாவது இறப்பதற்கு 33 நாட்கள் முன்பாக பணப்பரிவர்த்தனை செய்திருக்கிறார். இதனால் நீலா, கணவர் இறப்பினால் கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி வங்கியில் விண்ணப்பித்தார். ஆனால் 45 நாட்கள் என்கிற விதிமுறை 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்று 30 நாட்களாக குறைக்கப்பட்டு விட்டதாக வங்கி நிர்வாகம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து நிலாவின் காப்பீட்டு விண்ணப்பத்தை காப்பீட்டு நிறுவனமும் நிராகரித்து விட்டது. இதனால் வேதனை அடைந்த நீலா கடந்த மார்ச் மாதம் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

3 லட்சம் வழங்க உத்தரவு

இந்த வழக்கினை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மோகன்ராஜ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், விதிமுறைகள் மாற்றப்பட்ட விவரங்களை புகார்தாரருக்கு முறைப்படி தெரியப்படுத்தியிருக்க வேண்டியது வங்கியின் கடமையாகும். வங்கி அவ்வாறு தெரியப்படுத்தாத சூழ்நிலையில் வங்கியும், காப்பீட்டு நிறுவனமும் இணைந்து நீலாவிற்கு காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம், நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நிபந்தனை முக்கியம்

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த நிபந்தனை தான். முன்பு இறப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பாக 'ரூபே கார்டை' பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை இருந்தது. இப்போது 30 நாட்களுக்கு முன்பாக 'ரூபே கார்டை' பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும். இப்படி பரிவர்த்தனை செய்தவர்களின் குடும்பத்தினர், தாராளமாக விபத்து காப்பீடு கோரி வங்கியிடமும், அதனை தொடர்ந்து காப்பீட்டு நிறுவனத்திலும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு காப்பீடு தொகையாக ஐந்து லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+