என்ன இருந்தாலும் ஜோயல்ராஜுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.. போஸ்ட் ஆபீஸையே சூறையாடிய பயங்கரம்!
மன்னார்குடி தபால் அலுவலகத்தை ஊழியர் ஒருவர் அடித்து நொறுக்கினார்.
மன்னார்குடி: இருந்தாலும் ஜோயல்ராஜூக்கு இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது.. நிறைய முறை கேட்டு பார்த்தும் டிரான்ஸ்பர் தரலயாம்.. அதனால போஸ்ட் ஆபீசையே அடித்து துவம்சம் செய்து சூறையாடி விட்டார்! இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்!
மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருபவர் ஜோயல்ராஜ். வயசு 29 ஆகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர். இப்போதைக்கு பொதக்குடி தபால் நிலையத்தில் டியூட்டி போட்டு உள்ளார்கள்.
சம்பவத்தன்று மதியம் பொதக்குடியில் இருந்து மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திற்கு ஜோயல்ராஜ் வந்தார். வரும்போதே செம டென்ஷனாகத்தான் வந்தார். வந்தவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. திடீரென ஆபீசில் இருந்த கதவு, ஜன்னல் கண்ணாடிகள், கம்ப்யூட்டர்கள், பீரோ, டேபிள், சேர் என எல்லாத்தையும் அடித்து உடைத்தார்.

அடக்க முடியல
கண்ணில் என்னென்ன பட்டதோ எல்லாத்தையும் நொறுக்கி தள்ளினார். அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்கள் எல்லாம் அதிர்ச்சியில் நின்றார்கள். ஒரு சிலர் ஓடிசென்று ஜோயலை பிடித்து கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் யாருக்கும் ஜோயல் அடங்கவே இல்லை. எத்தனை பேர் சேர்ந்தும் ஜோயலை பிடிக்கவே முடியவில்லை. அவ்வளவு ஆவேசமாக இருந்தார்.

போலீஸ் வந்தது
அதனால் அவரை பிடிப்பதை விட்டுவிட்டு பயந்துகொண்டு எல்லோரும் ஆபீசிலிருந்து வெளியே ஓடிவந்துவிட்டனர். உடனடியாக மன்னார்குடி போலீசுக்கு தகவல் தரப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து ஜோயல்ராஜை மடக்கிப்பிடித்தனர். ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்றனர்.

விசாரணை
இது சம்பந்தமாக தலைமை தபால் நிலைய அதிகாரியும் ஒரு புகார் தந்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான், 2 மாசமாக ஜோயல்ராஜ் டிரான்ஸ்பர் கேட்டு வந்ததாகவும், அது கிடைக்காத விரக்தியில் இப்படி போஸ்ட் ஆபீசையே சூறையாடி விட்டதாகவும் தெரியவந்தது.

மதுபோதை
இதுக்கு முன்னாடி கூட ஜோயல்ராஜ் இப்படிதான் 2 முறை நடந்து கொண்டாராம். ஜோயல்ராஜ் ஆவேசத்தில் அடித்து நொறுக்கிய பொருட்களின் மதிப்பு எப்படியும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல இருக்குமாம். ஆபீசையே சின்னாபின்னபடுத்தியபோது ஜோயல் போதையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். கடைசியில் ஜோயல் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications