வழியில் போராட்டம்.. இறங்கி வேண்டிய கமல்.. வழிவிட்ட பெருந்தன்மை.. நெகிழ வைத்த திருவாரூர் மக்கள்!
மறியல் நடந்தபோது கமலுக்கு வழிவிட்டு பொதுமக்கள் உதவியுள்ளனர்.
Recommended Video

திருவாரூர்: திருவாரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் நடிகர் கமல்ஹாசன் செல்ல வழிவிட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக கமல் இன்று சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி கிளம்பினார். பிறகு அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, "இன்று தஞ்சை கிளம்புகிறேன் என்றும், 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல போவதாகவும் கூறினார்.
இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத, நிவாரண பொருட்கள் கிடைக்காத குக்கிராமங்களுக்கும் நாங்கள் சென்று வழங்க அதனை உள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படியே இன்று பிற்பகல் தஞ்சைக்கு பயணமானார்.

சாலை மறியல்
இதனிடையே, புயல் பாதித்து யாருமே தங்களை எட்டி பார்க்காததால் டெல்டா மக்கள் கோபமாக உள்ளனர். இதற்காக தமிழக அரசை கண்டித்து தினமும் சாலைமறியல், போராட்டம் என ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் இன்றும் கூட திருவாரூர் அருகே கோட்டூரில் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் சுற்றுவட்டாரத்திலுள்ள அம்மாபேட்டை, கோட்டூர், அம்மையப்பன் ஆகிய இடங்களிலிருந்து பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

வழிவிடவில்லை
அந்த நேரத்தில் கமல் அந்த பக்கம் வழியாக தஞ்சை சென்று கொண்டிருந்தார். கமல் வருவதை அறிந்த மக்கள், அவரை முற்றுகையிட்டனர். அவரது வாகனத்துக்கு வழியும் விடவில்லை. இதனால் கமல், உள்ளிட்டவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுவழியிலேயே நின்றனர்.

வழி விட்டு ஒதுங்கினர்
இதையடுத்து, போராட்டக்காரர்களிடம் கமல், நிவாரண பொருட்களுடன் வந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகவே வந்திருக்கிறோம் என்று கூறி மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், பொதுமக்கள், கமலுடன் இருந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் வைத்திருந்த உணவு பொட்டலங்களை பார்த்தபிறகு மனம் வருந்தினர். தொடர்ந்து கமலின் பயணத்துக்கும் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

நெகிழ்ந்த கமல்
இதுகுறித்து கமல் நெகிழ்ச்சியுடன் டிவீட் போட்டுள்ளார். அதில் "இவர்களா ஏழைகள், பெருந்தன்மைச் செல்வந்தர்கள்" என்று நெகிழ்ந்துள்ளார் கமல்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications