முத்துக்கு சமமான மதிப்பு.. முத்துப்பேட்டையில் 'இந்த' மீனை வாங்க வரிசை கட்டிய மக்கள்!
திருவாரூர்: முத்துப்பேட்டையில் மருத்துவ குணம் கொண்ட மீன் ஒன்று ரூ.25 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இந்த மீனை வாங்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டிருக்கிறார்கள்.
வழக்கமாக மருத்துவ குணம் கொண்ட மீன்களுக்கு டிமாண்ட் அதிகம். அந்த வகையில் இந்த மீன் மிகவும் ரேர் பீஸ் என்பதால் அதிக விலைக்கு போயிருக்கிறது.

இன்று காலை மீனவர்கள் மார்க்கெட்டுக்கு 'கத்தாழை' மீனை கொண்டு வந்திருக்கின்றனர். நமக்கு தெரிந்ததில் வஞ்சரம் காஸ்ட்லி என்று சொல்லலாம். ஆனால் அதைவிட இது விலை அதிகம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் உள்ளூர் மீனவர்கள் சுமார் 30 கிலோ எடைகொண்ட பெரிய கத்தாழையை பிடித்தனர். இது அப்போதே ரூ.3-4 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், இந்தோனேசியா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த மீனுக்கு மசுவு அதிகம்.
எனவே மீனவர்கள் இந்த வகை மீனை உடனே ஏற்றுமதி செய்துவிடுவார்கள். உள்ளூர் சந்தைக்கு சிறிய அளவிலான மீன்கள்தான் வரும். அப்படித்தான் இன்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு 4 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன் வந்திருக்கிறது. மீன் வந்தது தெரிந்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏலம் எடுக்க குவிந்தனர். ஆனால் விலை அதிகம் என்பதால் சாமானிய மக்களுக்கு கட்டுபடி ஆகவில்லை. எனவே வியாபாரிகள் ரூ.25 ஆயிரம் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள்.
இந்த வகை மீன்கள் இந்தோ-பசிபிக் பகுதியில் மட்டும்தான் காணப்படும். ஆஸ்திரேலியாவில் கறுப்பு நிறத்தில் இம்மீன் கிடைக்கும். மற்ற இடங்களில் இது கிடைப்பது அரிது.
அதேபோல, முத்துப்பேட்டையில் மீனவர்கள் வலையில் சிக்கிய மீனுக்கு தனிச்சிறப்பு உண்டு. காரணம். இது இங்குள்ள அலையாத்தி காடுகளில் வளர்ந்த மீனாக இருக்கிறது. அலையாத்தி காடுகளே ஒரு அதிசயம்தான். எனவே அதில் சிக்கிய மீனுக்கு இயல்பாகவே தனிச்சிறப்பு இருக்கிறது. இதே முத்துப்பேட்டையில் கடந்த ஆண்டு பிடிக்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன் சுமார் ரூ.48 ஆயிரத்திற்கும் அதிகமாக ஏலத்தில் போனது.
இந்த வகை மீனின் உடல் உறுப்புகள் மருத்துவ குணம் கொண்டதாக அறியப்படுகிறது. இயற்கையில் கால்சியம் அதிகம் நிறைந்த மீனாக இது இருக்கிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு இந்த மீன் நன்கு உதவும். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் இதயத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த மீனில் 100 கிராம் தசையில் 26 கிராம் அளவுக்கு புரதம் இருப்பதால், புரதச்சத்து அதிகம் கொண்ட மீனாக இது இருக்கிறது. தவிர கொலாஜன் குறிப்பிட்ட அளவு இருப்பதால் உடல் சுருக்கம் குறைவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
இவ்வளவு சிறப்பம்சங்கள் இருப்பதால்தான் இந்த மீன் ரூ.25 ஆயிரம் வரை ஏலத்தில் போயிருக்கிறது. வறுவலுக்கும் சரி, குழம்புக்கும் சரி இந்த மீன் சுவையாக இருக்கும். இதேபோன்று நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய மீன்கள் என்ன? அதன் சிறப்பம்சம் என்ன என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மீன்பிடி துறைமுகங்கள் இனி சிஐஎஸ்எஃப் வசம்? மத்திய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications