தாய்மாமா என்றால் சும்மாவா? 100வது பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்லாத பின்னணி!
திருவாரூர்: முதலமைச்சர் ஸ்டாலினின் தாய்மாமாவும், தயாளு அம்மாளின் அண்ணனுமான தட்சிணாமூர்த்தி நேற்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் தான் முதலமைச்சர் ஸ்டாலினின் தாயாரான தயாளு அம்மாளுக்கு பூர்வீகம். பள்ளிக்கூட பருவத்தில் தனது அம்மா தயாளுவுடன் ஊருக்கு வரும் போதெல்லாம் பூந்தோட்டம் என்ற ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித்தான் மாட்டு வண்டியில் பாட்டி வீட்டுக்குச் செல்வார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரை அப்போது எப்படி வரவேற்று அழைத்துச் செல்ல வந்தாரோ, அதேபோல் தான் இப்போதும் பேரளம் பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றால் வரவேற்க சென்றுவிடுகிறார் அவரது தாய்மாமா தெட்சிணாமூர்த்தி.

கடந்த ஆண்டு கூட நல்லாடை, பேரளம் பகுதிக்கு தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடச் சென்ற போது 99 வயதிலும் அவரது தாய்மாமா தெட்சிணாமூர்த்தி வரவேற்க சென்றார். அவரைப் பார்த்து திடுக்கிட்ட ஸ்டாலின், "நீங்க ஏன் இந்த வயதில் சிரமப்படுறீங்க? நானே வீட்டுக்கு வந்திருப்பேனே" என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்து தாமும் தாய்மாமா வீட்டுக்கு சென்று வந்தார்.
எத்தனை உறவுகள் இருப்பினும் தாய்மாமா உறவு என்பது சற்று விஷேசம் தான். மாமா என்ற உறவுக்கு ஈடு இணையாக வேறு எந்த உறவுமில்லை. இந்நிலையில் தாய்மாமாவின் 100வது பிறந்தநாளுக்கு அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துச் சொல்லி, வாழ்த்து பெறத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் முடிவு செய்திருந்திருக்கிறார்.
ஆனால் அவருக்கு கடந்த வாரம் ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் வந்த உடல் சோர்வு இன்னும் முழுமையாக களையவில்லை என்பதால் மருத்துவர்கள் இப்போதைக்கு வெளியூர் பயணங்களை தவிர்க்குமாறு அட்வைஸ் அளித்திருக்கிறார்கள்.இதனால் தான் தாய்மாமாவின் 100வது பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்துச் சொல்ல திருவாரூர் செல்லவில்லை முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனால் அதே வேளையில் திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் தலைமையில் திரளான திமுகவினரை தாய்மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்து பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தனக்கு உடல் சோர்வு களைந்தபிறகு திருவாரூர் சென்று தனது தாய்மாமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவார் முதலமைச்சர் ஸ்டாலின் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications