தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம்! வலுக்கும் எதிர்ப்பு! போரட்டத்தில் குதித்த தமிமுன் அன்சாரி!
திருவாரூர்: தமிழகம் முழுவதும் 'தி கேரள ஸ்டோரி ' திரைப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போராட்டம் நடத்தியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 'தி கேரள ஸ்டோரி ' திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்திருக்கிறது.
தமிழகத்தில் இப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அமைச்சர் சாமிநாதனிடம் கடந்த மே 3 அன்று நேரில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்படம் திரையிடப்படும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால் தேவையற்ற பதற்றம் உருவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் தமிழக அரசு, கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி காலை 11 மணிக்கு மஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அறிவிக்கப்பட்டு இரண்டரை மணி நேரத்தில் நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக நீதி அமைப்புகளும், ஃபாஸிஸ எதிர்ப்ப அமைப்புகளும் - கட்சிகளும் தங்களுடன் இப்போராட்டக் களத்தில் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு அனுமதி கொடுத்ததற்காக மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications