கருணாநிதி இல்லாத திமுக.. தலைவராக ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல்.. திருவாரூர் வேட்பாளர் யார்?

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக யாரை வேட்பாளராக நிற்க வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக யாரை வேட்பாளராக நிற்க வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக தலைவர் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்.

ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இன்னும் ஒரு மாதத்திற்கு தமிழக அரசியலில் மிக முக்கியமான தொகுதியாக திருவாரூர் தொகுதி மாறியுள்ளது.

முதல் தேர்தல்

முதல் தேர்தல்

இந்த தேர்தல் ஸ்டாலினும், திமுகவும் கருணாநிதி இல்லாமல் தனியாக சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். திருவாரூர் தொகுதி எப்போதும் திமுகவிற்கு முக்கியமான தொகுதியாகும். அதேபோல் திருவாரூர் சென்டிமென்டாக திமுகவிற்கு மிக முக்கியமான தொகுதி. ஆகவே இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.

ஸ்டாலின் தலைவர்

ஸ்டாலின் தலைவர்

ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவராக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த தேர்தல் அவரது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. அப்பாவின், தலைவரின் தொகுதியில் கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இது அவரின் தலைமையை நிரூபிக்க மிக முக்கியமான வாய்ப்பாகும்.

திமுக ஆசை

திமுக ஆசை

கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற நினைக்கிறது. சட்டமன்றத்திலும் திமுகவிற்கு அது பலத்தை கொடுக்கும். இதனால் இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இங்கு திமுக மாவட்ட செயலாளர்களை, தேர்தல் பணியாளர்களையும் நியமித்து திமுக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு

யாருக்கு

முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு இந்த தொகுதியில் வாய்ப்பளிக்க இருப்பதாக திமுக கூறியுள்ளது. கருணாநிதிக்கு நெருக்கமான ஒருவருக்கு சென்டிமென்டாக வாய்ப்பளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் யார் என்று விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. திருவாரூரை சேர்ந்த சில முக்கிய திமுக தலைகளுக்கு இந்த லக் அடிக்க வாய்ப்புள்ளது.

ஸ்டாலின் குடும்பம்

ஸ்டாலின் குடும்பம்

அதேபோல் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த யாராவது இங்கு போட்டியிடுவார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இங்கு நிறுத்தப்பட உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தது. பின் அதை திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் மறுத்தனர். இதனால் யார் இங்கே நிற்கவைக்கப்படுவார்கள் என்ற சஸ்பென்ஸ் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+