அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'
திருவாரூர்: ''தமிழகத்தை பாழாக்கிய அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. பழனிசாமியை மிரட்டி அடிமை கூட்டணியில் இணைத்துள்ளனர். அதிமுகவை, பாஜக விலைக்கு வாங்கிவிட்டது'' என்று முதல்வர் ஸ்டாலின் தனது முதல் பிரசார பரப்புரை பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். திருவாரூரில் இன்று அவர் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார்.

திருவாரூர் தெற்கு ரத வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதியின் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் வேட்பாளர் முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருவாரூர் என்றால் திமுகவின் ஊர்
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ''திருவாரூர் என்றாலே அது திமுகவின் ஊர், அதனால் இங்கிருந்து பரப்புரையை தொடர்கிறேன்.நேற்று முன்தினம்தான் திருவாரூர் தேரோட்டம் நடந்து முடிந்தது.
உலகப் பெருமை கொண்ட அந்த ஆழித்தேரை ஓட வைத்த தலைவர் நம் கருணாநிதி திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கி நீதிமன்றம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி என அனைத்து வசதிகளையும் செய்தது கருணாநிதி.
'டிரெண்ட்செட்டர்' திட்டம்
2021ல் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி பொறுப்பை வழங்கினீர்கள். முதல் நாளிலேயே விடியல் பயணம் என்ற திட்டத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தேன். காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் என எண்ணற்ற திட்டங்கள் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
திட்டங்களிலேயே Trendsetter என்றால் அது மகளிர் உரிமை தொகை தான். அதை நிறுத்த முயற்சித்த பாஜக யார் வயிறு எரிந்தாலும் மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பது தான் என் லட்சியம். அதனால் தான் பிரப்வரி மாதம் ரூ.5,000 வழங்கினோம். தேர்தலின் சூப்பர் ஸ்டாராக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது.
அதிமுகவை விலைக்கு வாங்கிய பாஜக
திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. எல்லா வகையிலும் தமிழகம் டாப்பில் இருப்பது பாஜகவுக்கும் அதன் அடிமை கூட்டத்துக்கும் எரிச்சலை உண்டாக்கி உள்ளது. தமிழகத்தை பாழாக்கிய அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. பழனிசாமியை மிரட்டி அடிமை கூட்டணியில் இணைத்துள்ளனர். அதிமுகவை விலைக்கு வாங்கிவிட்டது பாஜக.
திராவிட மாடல் 2.O
இந்தி திணிப்பை ஏற்கவில்லை என நம் வீட்டு குழந்தைகள் படிப்பதற்கு கூட நிதி ஒதுக்காத வஞ்சக் கூட்டத்திடம் தமிழகத்தை ஒப்படைக்க முடியமா? நான் உறுதியாக சொல்கிறேன். அமையக்கூடிய திராவிட மாடல் 2.Oவில் எங்களின் சாதனையையே நாங்களே முறியடிக்கும் வகையில் ஆட்சி வழங்குவோம். தமிழ்நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் ஆட்சியை வழங்குவோம்.
ஏப்ரல் 23ம் தேதி வாக்களிக்கும்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். என்டிஏவின் சந்தர்ப்பவாத கூட்டணியா? இல்லை. திமுகவின் சாதனையின் தொடர்ச்சியா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் உதயசூரியன்.. ஆதரிப்பீர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை.. '' என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக












Click it and Unblock the Notifications