திருவாரூர் ராஜமாணிக்கம் காதலி தந்த ட்விஸ்ட்.. ரூ.15 லட்சம் தந்து காத்திருந்தாரே! கடைசியில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் ராஜமாணிக்கம், ரூ.17 லட்சம் கைமாறியதில் நொந்து போய்விட்டார்.. வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை ஊருக்கு வந்த பிறகு திருமணத்துக்காக பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கிறார் ராஜமாணிக்கம். ஆனால், சொந்தக்கார பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம், அடுத்தடுத்து எதிர்பாராத ட்விஸ்ட்களை தந்துவிட்டது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

திருவாரூர் தாலுகா தென்னவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணியின் மகன் ராஜமாணிக்கம் (36). இவர் வெளிநாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில்தான் சொந்த ஊருக்கு வந்தார்..

Thiruvarur Rajamanickam CRPF Woman Constable Love

திருவாரூர் ராஜமாணிக்கம்

இந்நிலையில், ராஜமாணிக்கத்துக்கும், திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகள் செமிலாவுக்கும் (29) பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் தூரத்து உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.

செமிலா மத்திய ரிசர்வ் காவல் படையில் போலீஸாக பணியாற்றி வருகிறார். கோவை பட்டாலியன் கம்பெனி C பிரிவில் தற்போது டியூட்டி பார்த்து வருகிறார்.. செமிலாவுக்கும் ராஜமாணிக்கத்துக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியிருக்கிறது.. இந்த விஷயம் பெண் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.. உடனே செமிலாவின் அம்மா சசிகலாவும், தன்னுடைய மகளை ராஜமாணிக்கத்துக்கே திருமணம் செய்து கொடுப்பதாக நம்பிக்கை தந்திருக்கிறார். இது ராஜமாணிக்கத்தை மகிழ்ச்சியை தந்தது..

வெளிநாட்டில் வேலை பார்த்த ரூ.15 லட்சம்

வெளிநாட்டில் வேலை பார்த்த காலத்தில் செமிலா, அவரது அம்மா சசிகலா, சகோதரர் கோகுல்ராஜ் (23) உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் அனுப்பியுள்ளார். பல தவணைகளாக அனுப்பப்பட்ட பணம் மொத்தம் ரூ.15 லட்சத்து 37 ஆயிரமாகும்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல ராஜமாணிக்கம் எதிர்பார்த்த திருமணம் நடக்கவில்லை... சசிகலா தன்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பதாக சொன்னதையும் செய்யவில்லை.. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.. இதனால் வாய்விட்டு பணத்தை கேட்டும்கூட, செமிலாவும் அவரது குடும்பத்தினரும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

காதலி தந்த ட்விஸ்ட்

இப்படிப்பட்ட சூழலில், செமிலாவுக்கு மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றும் இன்னொரு காவலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது... அதுமட்டுமல்லாமல், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு அந்த போலீஸ்காரரை செமிலா திருமணமும் செய்து கொண்டார்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு ராஜமாணிக்கம் அதிர்ச்சியடைந்தார்.. தான் திருமணம் செய்து கொள்வதாக நம்பி கொடுத்த ரூ.15 லட்சத்து 37 ஆயிரமும் பறிபோன நிலையில், உடனே திருவாரூர் போலீசுக்கு ஓடினார்..

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி செமிலாவும் அவரது குடும்பத்தினரும் ரூ.15 லட்சத்து 37 ஆயிரம் வாங்கியதாகவும், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் சொல்லி, ராஜமாணிக்கம் திருவாரூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. தன்னை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கேட்டுக்கொண்டார்.

பெண் போலீஸே இப்படியா

இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு செமிலா, அவரது அம்மா சசிகலா, சகோதரர் கோகுல்ராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

பிறகு 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் செமிலாவுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது... சசிகலாவை திருவாரூர் மகளிர் கிளை சிறையிலும், கோகுல்ராஜை நாகை கிளை சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணம் செய்து கொடுப்பதாக கூறி ரூ.15 லட்சத்து 37 ஆயிரம் வரை பெற்றதாக எழுந்த புகாரில் சிஆர்பிஎப் பெண் காவலர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+