கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாமா.. வேகமாக பரவும் தகவல்.. கலெக்டர் எச்சரிக்கை
திருவாரூர்: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என தவறான தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அரசுத் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும், தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கிவைப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை வைத்துள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் அரசால் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட சமயத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்தனர் அடுத்தடுத்தாக மேல்முறையீடு செய்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டார்கள். அந்த வகையில் அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆக உயர்ந்தது.
தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் புதிதாக ரேஷன் கார்டு பலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 15ம் தேதி நிலவரப்படி புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024ம் நிதியாண்டில் 8 ஆயிரத்து 123.83 கோடி ரூபாயும், 2024-25ம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 1.15 கோடிக்கும் அதிகமானோர் கலைஞர் மகளிர் உரிமை தொகை தற்போது பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், இதுவரை மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்து அறிய ஆர்வமாக உள்ளார்கள். அரசு இது தொடர்பாக அறிவிப்பு எப்போது வெளியிடும் என்பது குறித்து அறிய ஆர்வமாக உள்ளார்கள். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக சிலர் வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். அதாவது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக பொய்யான தகவலை கூறி சிலர் வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டனர். இது தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகஅரசு விளக்கம் அளித்தது. இதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் பரவுவது வதந்தி என்றும், யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் அரசுத் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பரவுவது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications