திருவாரூர்: கர்ப்பிணி மனைவி...அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் ஷாக் அடித்து பலி
அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமத்துவ நாளாக இன்று தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த நபரின் பெயர் சின்னத்துரை என்பதாகும். அவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் என்பரின் மகனாவார். 31 வயது நிரம்பிய சின்னத்துரைக்கு திருமணம் ஆகி மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கிராமத்தில் பேனர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பேனர் அருகில் இருந்த மின்சார கம்பியில் பட்டதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்த வந்த முத்துப்பேட்டை போலீசார் இளைஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications