ஏழ்மையில் தவிக்கும் பளுதூக்கும் வீரர்.. உதவிக்கரம் நீட்டிய டி.ஆர்.பாலு மகன்..!
திருவாரூர்: மன்னார்குடியை சேர்ந்த பளு தூக்கும் வீரர் கோவிந்தசாமி காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கு தேவையான உதவிகளை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. செய்துள்ளார்.
கோவிந்தசாமி 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் தற்போது கட்டிட பணிகளுக்கு சித்தாளாக சென்று வருகிறார். ஏழ்மையான நிலையிலும் தான் ஒரு பளுதூக்கும் வீரராக வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கோவிந்தசாமி அதற்கான பயிற்சிகளிலும், முயற்சிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.

ஸ்வீடன், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தும் ஏழ்மை நிலை காரணமாக கோவிந்தசாமியில் அங்கு செல்லமுடியவில்லை. இந்நிலையில் கனடாவில் நடைபெறும் காமன்வெல்ட் போட்டியில் பங்கேற்க கோவிந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது பயண செலவுக்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தார்.
இது தொடர்பான தகவல் அறிந்த மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, கோவிந்தசாமியை அழைத்து உதவித்தொகை தொடர்பாக ஏன் தன்னிடம் சொல்லவில்லை என கடிந்துகொண்டார். பின்னர் இரண்டரை லட்ச ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக உறுதியளித்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., அரசிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும் கோவிந்தசாமிக்கு நம்பிக்கை ஊட்டினார்.
இதனால் நெகிழ்ந்து போன கோவிந்தசாமியின் கிராமமக்கள், அவருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications