பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுறேனு நினைக்காதீங்க! அதிமுக சிறப்பாக செயல்படுகிறது! ரூட்டை மாற்றிய தினகரன்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர் : அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாகத் தான் செயல்படுகிறார்கள். அதற்காக பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். திமுகவை எதிர்த்து தேவையானதுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்துறாங்க என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Recommended Video

    பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுறேனு நினைக்காதீங்க! அதிமுக சிறப்பாக செயல்படுகிறது!

    திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    முன்னதாக திருவாரூர் வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமுமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திமுக ஆட்சி நிலை

    திமுக ஆட்சி நிலை

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்," வாக்களித்த மக்களுக்கு, திமுக ஆட்சி சோதனையானது என நிரூபிக்கப்பட்டு வருகிறது. திமுக கூறியதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலேயே திமுக ஆட்சி உள்ளது.

    அதிமுக ஆட்சிக்கு மாற்று

    அதிமுக ஆட்சிக்கு மாற்று

    அதிமுக ஆட்சிக்கு மாற்றாக திமுக ஆட்சியை மக்கள் கொண்டு வந்தனர். ஆனால் திமுகவின் சுயரூபம் வெளிப்பட்டு உள்ளது. இது 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட்டு வருகிறது இந்தி திணிப்பை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

    விடியல் ஆட்சி என்பது தவறு

    விடியல் ஆட்சி என்பது தவறு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசை விடியல் ஆட்சி எனக் கூறுவது தவறு. இருண்ட ஆட்சி எனக் கூற வேண்டும். ஏழை எளியோருக்கு பயனளிக்கும் அம்மாவின் அனைத்து திட்டங்களுக்கும் திமுக அரசு மூடுவிழா நடத்துகின்றனர். தமிழகத்தில் விடியல் ஆட்சி என்ற பெயரில் இருண்ட ஆட்சிதான் நடைபெறுகிறது. மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    அதிமுக சிறப்பு

    அதிமுக சிறப்பு

    அதிமுக சிறப்பாக செயல்படுவதாக கூறியது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த தினகரன், "அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாகத் தான் செயல்படுகிறார்கள். அதற்காக பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். திமுகவை எதிர்த்து தேவையானதுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்துறாங்க." என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+