‘இது சும்மா கூடிய கூட்டமா..’ திருவாரூரில் பச்சை துண்டை தலையில் கட்டி விஜய் அடித்த பன்ச்
திருவாரூர்: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய்யும் பிரச்சாரம் செய்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பச்சை துண்டு அணிந்து, திருவாரூர் பிரச்சனைகளை அடுக்கினார். திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வரை விமர்சித்து கடைசியாக பச்சை துண்டை தலையில் கட்டி ஒரு பன்ச் அடித்தார்.
விஜய் பிரச்சாரம்
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். இதையடுத்து முழு நேர அரசியலில் இறங்கி விட்டார். மக்களை சந்திக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி விஜய் கடந்த வாரம் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

ரத்தான பெரம்பலூர் பயணம்
திருச்சி பிரச்சாரத்தை முடித்துவிட்டு அன்றைய தினமே விஜய் அரியலூர் மாவட்டம் சென்றிருந்தார். அதே நாளில் அவர் பெரம்பலூர் மாவட்டம் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதிகளவு மக்கள் கூட்டம் கூடியதால் பெரம்பலூர் பயணத்தை அவர் ரத்து செய்தார். இதையடுத்து பயணத்தை எளிமையாக செய்யும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பிரச்சாரம் செய்தார்.
ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு
மதியம் நாகப்பட்டினத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஸ்டாலினை சிஎம் சார் என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். தவெக கூட்டத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டுகளை குறிப்பிட்டு, இதை போல மோடி, அமித்ஷா நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க முடியுமா என கேட்டிருந்தார்.
பச்சைத் துண்டு அணிந்து பேசிய விஜய்
நாகப்பட்டினம் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அவர் திருவாரூர் சென்றிருந்தார். திருவாரூர் மாவட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊர். திமுக வலுவாக உள்ள முக்கிய பகுதி. அங்கு விஜய் பிரச்சாரம் மேற்கொள்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. திமுகவினரும் இதை உற்று கவனித்து வந்தனர். விஜய் பச்சை துண்டு அணிந்தபடி பேசினார்.
பட்டியலிட்டு சாடிய விஜய்
"திருவாரூர் உங்கள் அப்பாவின் சொந்த ஊர் என்கிறீர்கள். உங்கள் அப்பாவின் சொந்த ஊர். இங்கு அடிப்படை சாலை வசதி கூட இல்லையே." என்றவர் திருவாரூர் பல்கலைக்கழம், மருத்துவக்கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் பாதை பிரச்சனைகள் தொடங்கி விவசாயிகளுக்கு நெல் கொள்முதலின்போது கமிஷன் வாங்கும் புகார் வரை பட்டியலிட்டு சரளமாக பேசினார்.
டிஆர்பி ராஜாவுக்கு பதிலடி
விஜய் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், விஜய் தன்னுடைய பேச்சில் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். விஜய் பேசும்போது, "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். சிஎம் குடும்பத்திற்கு சேவை செய்வது தான் அவர் வேலை. அதை விட மக்கள் பணி தான் முக்கியம் என்பதை நாம் உணர்த்த வேண்டும்." என்றார்.
சும்மா கூடிய கூட்டமா
இறுதியாக அவர், "நண்பா ஒரு டவுட்டு. இது சும்மா கூடிய கூட்டம் ஓட்டுப் போட மாட்டார்கள் என்கிறார்களே. அப்படியா." என்று மக்களை பார்த்து சொல்லி சிறிது நேரம் இடைவெளிவிட்டார். தொடர்ந்து அவர், "இது சும்மா கூடிய கூட்டமா." என்று மக்களிடம் கேட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள், "இல்லை" என்றதும், கோடான கோடி நன்றிகள் என சொல்லி தோளில் இருந்த பச்சைத் துண்டை கழற்றி தலையில் கட்டி கூட்டத்தினருக்கு கையசைத்து நன்றி தெரிவித்து சென்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications