ட்விஸ்ட்! கலைஞர் கோட்டம் திறப்புவிழா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வருகை திடீர் ரத்து! என்ன காரணம்?
திருவாரூர்: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவா திருவாரூர் அருகே காட்டூரில், ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

இந்த திறப்பு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பார், முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறப்பு விமானம் மூலம் இன்று திருச்சி வருகைத் தந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்று, கார் மூலம் காட்டூருக்கு சென்று கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், திடீரென நிதிஷ் குமார் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை சரி இல்லாததால் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காத நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, அமைச்சர் சஞ்சய் ஜா ஆகியோர் தமிழ்நாடு வருகின்றனர். அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பதிலாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications