இதய குறைபாடு.. போராடும் பிஞ்சு சிறுவன்.. அறுவை சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள் ப்ளீஸ்!

இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டு போராடி வரும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டு போராடி வரும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

தினமும் காலை நான் கோவிலுக்கு சென்று என் மகனை காப்பாற்றும் படி கடவுளிடம் வேண்டுவேன். என் மகனை அவனின் கஷ்டங்களில் இருந்து விடுவித்து அவருக்கு புதிய வாழ்க்கையை கொடுக்கும்படி பலமுறை வேண்டி இருக்கிறேன். மக்களின் வேண்டுதலை கடவுள் கேட்பார் என்பார்கள், ஆனால் அவர் ஏன் என்னுடைய வேண்டுதலை கேட்கவில்லை என்று தெரியவில்லை.

எங்கள் வாழ்க்கையை மாற்றிய அந்த நாளை நினைத்தால் எனக்கு இப்போதும் உடல் நடுங்குகிறது.

நான் அன்று என்னுடைய பணியை முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி என் மகனுக்காக காத்து இருந்தேன். அவன் தன் நண்பர்களுடன் விளையாட சென்று இருந்தான். ஆனால் சில நிமிடத்தில் திரும்பி வந்தவன், தள்ளாடிக்கொண்டே, ''அப்பா என்னால் மூச்சு விட முடியவில்லை'' என்று கூறினான்.

எனக்கு பயமாகி உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவனுக்கு மருத்துவர்கள் ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்தார்கள். அதன்பின் அவனின் உடல்நிலை சரியானது, அவனை வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவனுக்கு காய்ச்சல் வந்தது. அவனுக்கு வீட்டு மருந்தும், மாத்திரைகளும் கொடுத்து பார்த்தும் அது குணமாகவில்லை. அதன்பின் அவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், அவனுக்கு நிறைய சோதனைகள் செய்யப்பட்டது.

அதன்பின் வெளியான சோதனை முடிவுகள்தான் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அவனுக்கு சையனோடிக் கன்ஜெனிட்டல் ஹார்ட் டிசிஸ் ( cyanotic congenital heart disease) எனப்படும் இதய நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எங்கள் துடிப்பான ஆரோக்கியமான மகன் இப்படி பெரிய இதய நோயால் அவதிப்படுவது என்னுடைய மனைவி மற்றும் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்ததது. என் மனைவி நாகமணி அதன் பின் சாப்பிடவே இல்லை. தினமும் கடவுளை வேண்டி, கோவிலுக்கு சென்று, மகனுக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்.

என் மனைவி, மகன் இருவரையும் இப்படி பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நாங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும், ஏன் இதை அனுபவிக்க வேண்டும் என்று வருத்தமாக இருக்கிறது.

எங்கள் மகன் மகேசுக்கு உடனே இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதற்கு 4.5 லட்சம் ரூபாய் ($ 6,314) செலவாகும். என்னை போன்ற ஏழையான குடும்பத்தை சேர்ந்தவனுக்கு இவ்வளவு தொகை எப்படி கிடைக்கும்.

எங்களால் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்பதால் மருத்துவர்கள் உடனே என் மகனுக்கு மருந்து மாத்திரைகளை கொடுக்க அறிவுறுத்தினார்கள். ''இப்போது மருந்து மாத்திரைகளை கொடுக்கிறோம், ஆனால் இது தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வு கிடையாது. அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்'' என்று கூறிவிட்டார்கள்.

அவர்கள் இப்படி சொல்லி இரண்டு மாதம் ஆகிவிட்டது, எங்கள் மகனுக்கு சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. நாளாக நாளாக அவனின் உடல்நிலை மோசமானது. அவனின் உடல் வெப்பநிலை அதிகம் ஆனது. அவன் சில நிமிடம் நடந்தால் கூட, அவனின் தோல் நீல நிறமாக மாறியது.

பள்ளிக்கு சென்று, நண்பர்களுடன் சந்தோசமாக விளையாட வேண்டிய வயதில், என் மகன், படுத்தப்படுக்கையாக இருக்கிறான். மிக மோசமான வலியில், சிறிய விஷயங்களை கூட செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறான்.

இனிமேல் அவனுக்கு மருந்துகள் கொடுத்தால் அது பலன் அளிக்காது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

நான் தினக்கூலியாக இருக்கிறேன். கொஞ்சம்தான் வருமானம் வருகிறது. எங்கள் வீட்டில் இருக்கும் மூவருக்கும் இதை வைத்துதான் சாப்பாடு போட முடிகிறது. மகேஷ் சிகிச்சைக்கு செலவு செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவனின் அறுவை சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்வது எனக்கு இயலாத காரியம்.

நீங்கள் நினைத்தால் அவன் உயிரை காப்பாற்ற முடியும். மகேஷ் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் மகேஷ் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

"Fundraising for cancer is a way to support medical treatment cost. Ketto is a largest crowdfunding website that supports crowdfunding for cancer, heart and many other treatments."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+