துணிவு விமர்சனம்: வங்கிகளில் இப்படியொரு நூதன மோசடி நடக்குதா? நெகட்டிவ் ஷேடில் மிரட்டி விட்ட அஜித்!
சென்னை: முதல் பாதியில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அடியன்ஸை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துள்ளார் நடிகர் அஜித். கடைசி வரை அவர் பெயர் என்னவென்றே சொல்லாமல் மிஸ்டர் எக்ஸ் ஆகவே மிரட்டி உள்ள விதம் இயக்குநர் எச். வினோத்தின் வேறலெவல் ட்ரீட்மென்ட் என்று தான் சொல்ல வேண்டும்.
வங்கியில் கொள்ளையடிக்க வரும் கேங்கிற்கு முன்னாடியே அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் செம கூலாக பேப்பர் படிப்பது. கேங்ஸ்டர்களின் துப்பாக்கிகளை பிடுங்கியே அவர்களை துவம்சம் செய்வது என முழு நெகட்டிவ் ஷேடில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்துள்ளார் அஜித்.

இரண்டாம் பாதியில் வங்கியில் நடக்கும் நூதன மோசடிகள் பற்றி விரிவாக இயக்குநர் எச். வினோத் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ், கிரெடிட் கார்ட் உள்ளிட்ட விவகாரங்களை துணிச்சலோடு தொட்டுள்ளார். ஆனால், சில இடங்களில் அதுவே படத்திற்கு வில்லனாகவும் மாறி உள்ளது.
முதல் பாகத்தில் என்ன கதை என்றே தெரியாமல் தாறுமாறாக சென்ற திரைக்களம் இரண்டாம் பாதியில் இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்கிற ரீதியில் சற்றே ரசிகர்களை பின் சீட்டில் சென்று அமர செய்கிறது. மேலும், கடைசி கிளைமேக்ஸ் ஃபைட் சீன் எல்லாம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. அதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்து விட்டு இயக்குநர் ஹெச். வினோத் இரண்டாம் பாதியும் அஜித் ரசிகர்களை மனதில் வைத்தே திரைகதையை ஸ்பீடு செய்திருந்தால் துணிவு தூள் கிளப்பி இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. துணிவு படத்தின் முழு விமர்சனத்தை இந்த லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்!
Thunivu Review: அடேங்கப்பா.. இப்படியொரு ஸ்பீடில் அஜித் படமா? துணிவு விமர்சனம் இதோ!












Click it and Unblock the Notifications