திருமலை திருப்பதியில் ஊடுருவிய தீவிரவாதிகள்!.. போலீஸாருக்கு கிடைத்த மர்ம கடிதம்.. நடந்தது என்ன?
திருப்பதி: திருமலை திருப்பதியில் பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக போலீஸாருக்கு இமெயில் மூலம் தகவல் கிடைத்துள்ள நிலையில் அந்த மெயிலை அனுப்பியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரம் திருப்பதி. இங்குள்ள மலை பகுதியான திருமலையில் ஏழுமலையான் வீற்றிருக்கிறார். ஏழைகளின் ஆபத்பாந்தவன் ஏழுமலையான் என்பார்கள்.
பெருமாளை தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அது போல் ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி), பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானோர் திருமலைக்கு வந்து செல்கிறார்கள்.

கோடை விடுமுறை துவங்கிவிட்ட நிலையில் தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானின் பாதுகாப்பு கருதி கோயில் தரிசனத்திற்கு செல்வோர் செல்போன், கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மேலும் கோயில் கோபுரத்திற்கு செல்வதற்கு முன்பே பக்தர்களை போலீஸார் நன்கு சோதனை செய்வர்.
அவர்களிடம் ஆட்சேபத்துக்குரிய பொருட்கள் இருந்தால் அவற்றை போலீஸார் பறித்துக் கொண்டு தரிசனத்திற்கு அனுப்பிவைப்பர். சட்டவிரோத பொருட்கள் இருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவர். திருமலை ஏறுவதற்கு முன்பு பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்படும். அவர்களிடம் இருக்கும் பீடி, சிகரெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டு அனுப்பி வைப்பர்.
திருமலையில் சிகரெட் பிடிக்கவும் மது குடிக்கவும் அனுமதி இல்லை. பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உண்டியல் வசூலும் அதிகமாகவே இருக்கிறது. நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் வசூல் குவியும். தங்கமாகவும், வெள்ளியாகவும், வெளிநாட்டு பணமும் குவிகிறது. அது போல் சிலர் கடைசி காலத்தில் தங்கள் சொத்துகளையும் ஏழுமலையானுக்கு எழுதிவைத்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக திருப்பதி போலீஸாருக்கு இமெயில் வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து திருப்பதி மலை முழுவதும் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் பக்தர்களை தீவிர சோதனைக்குள்ளாக்கி வருகிறார்கள்.

திருமலைக்கு பேருந்து மூலம் செல்லும் பக்தர்கள், மலையேறி செல்லும் பக்தர்கள் என அனைவரையும் தீவிர சோதனைக்குள்படுத்தி வருகிறார்கள். இது தவிர திருப்பதி மலை முழுவதும் கண்காணிப்பை போலீஸார் பலப்படுத்தியுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், சாமி தரிசன வரிசைகள், லட்டு கவுன்ட்டர்கள், அன்னதான கூடங்கள், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள், மொட்டை போடும் இடங்கள் ஆகிய அனைத்தும் தீவிர சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பதி மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி, போலீஸாருக்கு கிடைத்த மெயில் வெறும் புரளி. எனவே பக்தர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளார். எனினும் பக்தர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் சோதனை செய்யப்பட்டும் வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications