பிரியாணி 1 ரூபாய்.. ஆனால் ஃபைன் 250.. அடித்துப் பிடித்து வாங்கிவிட்டு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி!
திருப்பதி: புதிதாக திறக்கப்பட்ட ஹோட்டலில் 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டதால் கூட்டம் குவிந்தது. ஏராளமானோர் 1 ரூபாய்க்கு பிரியாணி வாங்கிச் சென்ற நிலையில், போலீசார் ஒவ்வொருவருக்கும் 250 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தெலுங்கானா மாநிலம் திருப்பதியில் கரீம் நகரில் ஹோட்டல் ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2.30 மணிக்கு மேல் 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. பிரியாணி வாங்க வருபவர்கள் கண்டிப்பாக ஒரு ரூபாய் நோட்டு கொண்டு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

1 ரூபாய் நோட்டு கொண்டு வந்தால் மட்டுமே பிரியாணி, ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டும் தான், என்ற நிபந்தனையையும் ஹோட்டல் நிர்வாகம் விதித்தது. ஆனாலும், கூட்டம் கும்மியெடுத்தது. இந்த விளம்பரத்தை பார்த்த மக்கள் பிரியாணியை வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு, 1 ரூபாய் தாள்களோடு ஹோட்டல் முன்பு உள்ள சாலையில் திரண்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் ஹோட்டல் முன்பு காத்திருந்தனர். பிரியாணி வாங்க வந்தவர்கள் அப்பகுதியின் முக்கிய சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு பிரியாணி வாங்க அடித்துப் பிடித்து ஓடி வந்தனர். ஹோட்டலுக்குள் நுழைய பெரும் தள்ளுமுள்ளே நடந்தது.
நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, ஹோட்டல் உரிமையாளர் போலீசார் அழைப்பு விடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போனது. ஹோட்டலையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.
1 రూపాయి చికెన్ బిర్యానీ కోసం ఎగబడి హోటల్ మీద దాడి చేసిన కరీంనగర్ ప్రజలు
— Telugu Scribe (@TeluguScribe) June 17, 2023
కరీంనగర్లో ఓ హోటల్ ఓపెనింగ్ సంధర్భంగా రూపాయికే చికెన్ బిర్యానీ ఆఫర్ పెట్టిన ఓనర్. 800 బిర్యానీ ప్యాకెట్లు అయిపోవడంతో హోటల్ మీద దాడి చేసిన జనం.
ట్రాఫిక్ జామ్ కావడంతో రోడ్ పక్కనే బైకులు ఆపిన వారికి 100… pic.twitter.com/pndArJKX0g
1 ரூபாய் பிரியாணியை வாங்க வந்தவர்களின் வாகனங்கள் சாலையில் நின்றதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், போலீசார் பிரியாணி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த பொதுமக்கள் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி இருப்பதை பார்த்து அவற்றுக்கு சகட்டுமேனிக்கு ரூ. 200 முதல் 250 ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
இதனால் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என்று வந்தவர்கள் ரூபாய் 250 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹோட்டலும் மூடப்பட்டதால், பலரும் பிரியாணி கிடைக்காமல், அபராதம் கட்டிய ஏமாற்றத்தோடு திரும்பினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications