இந்த ஆண்டில் இரு வைகுண்ட ஏகாதசி.. தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்டுகள் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா?
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இரு முறை வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது.

இன்னொன்ரு டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 23 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20ஆயிரம் பக்தர்களும் இலவச தரினமும் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும்.

இந்த 10 நாட்களும் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். அந்த வகையில் ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், இலவச தரிசன டிக்கெட்டுகள் 5 லட்சமும் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்த மாதம் 29ஆம் தேதி ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்படும். அதைத் தொடர்ந்து கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ள சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications