திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு! வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் புக் செய்வது ரொம்பவே ஈஸி! இதை பாருங்க
திருப்பதி: வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மொத்தம் 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சிறப்புத் தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை எப்படி முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்..
வைஷ்ணவ பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி பண்டிகை என்பது மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் மொத்தம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். பெருமாள் கோவில்களில் இது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இந்தாண்டிற்கான பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. அனைத்து கோயில்களைக் காட்டிலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஏகாதசி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் இதற்காகத் திருப்பதி வருவார்கள்.

சொர்க்க வாசல்
இந்த காலகட்டத்தில் 10 நாட்கள் முழுவதும் திருப்பதி சொர்க்க வாசல் திறந்திருக்கும். இதில் இந்தாண்டு சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 50 ஆயிரம் டோக்கன் விகிதம் 10 நாட்களுக்கு 5 லட்சம் டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த சர்வ தரிசன டோடக்கன்களை திருப்பதியில் மட்டுமே பெற முடியும். எனவே, வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களால் இந்த டோக்கனை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.

சிறப்புத் தரிசன டோக்கன்
இருப்பினும், கவலை வேண்டாம். இதேபோல் சுமார் 2.5 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்களும் திருப்பதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.300ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்புத் தரிசனத்திற்குத் தினசரி 25,000 டோக்கன்கள் விகிதம் 2.5 லட்சம் சிறப்புத் தரிசன டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வ தரிசன டோக்கன்களை போல இல்லாமல் இதை நாம் ஆன்லைன் மூலமாகக் கூடப் பெறலாம். சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை இன்று (டிச.24) முதல் நாம் புக் செய்யலாம். இதன் மூலம் ஜனவரி 1 முதல் 11 வரையிலான தேதிகளில் சொர்க வாசல் திறந்திருக்கும் போது சிறப்புத் தரிசனம் செய்யலாம்.

ஆன்லைனில் புக் செய்வது எப்படி
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்த டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை புக் செய்வது ரொம்பவே ஈஸி. சிறப்புத் தரிசன டிக்கெட்களை புக் செய்து தருகிறோம் என்று சொல்பவர்களிடம் ஏமாறாமல், இந்த எளிய ஸ்டெப்களை பின்பற்றி டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முதலில் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருந்தால் லாகின் செய்யவும், புதிய பயனாளி என்றால் மொபைல் எண் உள்ளிட்ட தரவுகளை ரிஜிஸ்டர் செய்யவும், அதன் பிறகு லாகின் செய்ய வேண்டும்.

ரொம்பவே ஈஸி
அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் இடத்தை பொறுத்து அதிகபட்சம் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கை மாறும். உதாரணமாக, திருப்பதிக்குக் குறைந்தபட்சம் இரண்டு மற்றும் அதிகபட்சம் நான்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் குறிப்பிட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கேற்ப அதில் செலக்ட் செய்யவும். அதில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகத் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் திருமலையில் கூடுதல் ரூம்களை பெற வேண்டும்.

ரூம்கள்
பக்தர்கள் தாங்கள் தங்குமிடத்தையும் கூட ஆன்லைன் மூலமே புக் செய்யலாம்.. குறைந்தபட்சம் ஒரு நாள் முன்கூட்டியே அல்லது அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பு தங்குமிடத்தை புக் செய்து கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் எந்த தேதியில் தரிசனத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களோ அதை செலக்ட் செய்யவும். அது பச்சை நிறத்தில் இருந்தால், டிக்கெட்கள் இருக்கிறது என்று ஆர்த்தம். மஞ்சள் நிறத்தில் இருந்தால் வேகமாக நிரம்புகிறது என அர்த்தம். நீல நிறத்தில் இருந்தால் அந்த நாளுக்கான டிக்கெட் இன்னும் ஓபன் செய்யப்படவில்லை என அர்த்தம். சிகப்பு நிறத்தில் இருந்தால் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

கடைசி ஸ்டெப்
அடுத்த பக்கத்தில் ரூம்கள் விலையுடன் வரும். அதில் எத்தனை பேர் செல்கிறீர்களோ அதற்கேற்ப உங்களுக்குப் பிடித்த ரூம்களை செலக்ட் செய்யுங்கள். அடுத்துச் சிறப்புத் தரிசனத்திற்கான நேர ஸ்லாட்டைத் தேர்வு செய்யவும்.. தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கு விருப்பமான நேர ஸ்லாட்டைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்த பக்கத்தில் மொத்தம் எத்தனை பேர் செல்கிறீர்களோ அந்த எண்ணிக்கையைப் பதிவிடவும். ஒவ்வொரு பக்தரின் பெயர், வயது, பாலினம், ஐடி மற்றும் அடையாள அட்டை எண், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications