திருப்பதி மலையில் அடுத்தடுத்து சிக்கும் சிறுத்தைகள்.. மரபணு சோதனை நடத்த வனத்துறை திட்டம்

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் மற்றொரு சிறுத்தை சிக்கியுள்ளது. 50 நாட்களில் 3 சிறுத்தைகள் சிக்கிய நிலையில் சிறுத்தைக்கு மரபணு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பேருந்து மூலம் மட்டுமல்லாது அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக பாதையாத்திரையாக சென்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பாதை யாத்திரை செல்லும் பகுதி வனப்பகுதி என்பதால் அவ்வப்போது வன விலங்குகளும் வந்து செல்லும். சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி ஒன்று அலிபிரி நடைபாதையை கடந்து சென்றது.

Leopards trapped in Tirupati Hill Forest department plan to conduct genetic testing

கடந்த ஜூன் மாதம் ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில், 7வது மைல் அருகே சிறுத்தை ஒன்று கவுசிக் என்ற 3 வயது சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டு விரட்டியதை அடுத்து சிறுவனை கீழே போட்டு விட்டு சிறுத்தை ஓடிவிட்டது.

காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை லக்ஷிதா என்ற சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது.

இதனையடுத்து திருப்பதி மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த தேவஸ்தான நிர்வாகம், சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தது. அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. தற்போது அதே பகுதிக்கு அருகே வைத்து இருந்த கூண்டில் மற்றொரு சிறுத்தையும் சிக்கியுள்ளது.

கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகளை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராபேட்டை வனப்பகுதியில் விடப்பட்டது. அடுத்ததாக சிக்கிய சிறுத்தை சிறுமியை கொன்றதாக இருக்கலாம் என கருதப்படுவதால் அவற்றின் ரத்தம், நகம், முடி உள்ளிட்டவை மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான தடையம் இருந்தால் அந்த சிறுத்தையை திருப்பதியில் உள்ள வன விலங்குகள் அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வதாக சிக்கிய சிறுத்தைக்கும் மரபணு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+