Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதிக்கே நாமம்.. தேவஸ்தானம் உண்டியலில் 100 கோடியில் கை வைத்தது யார்? சீறிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு, பரபரப்பை ஆந்திர மாநிலத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.. இந்த வழக்கு, சிபிசிஐடி வசம் ஆந்திர ஹைகோர்ட் ஒப்படைத்துள்ளது. இதனிடையே, திருப்பதி கோயிலை அரசியலுக்காக பயன்படுத்துவதா? என்று ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் - பாஜக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது, மாநில அரசியலில் கூடுதல் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பல வருடங்களாகவே இருந்தவர் திருமலை பெரியஜீயர் மடத்தை சேர்ந்த எழுத்தர் சி.வி. ரவிக்குமார்.. இவர் கடந்த 2023ல் உண்டியல் காணிக்கை எண்ணும் இடமான பரகாமணி பகுதியிலிருந்து அமெரிக்க டாலர்களை மறைத்து வெளியே கொண்டு வந்தார்.

rs100 crore Tirumala Tirupati Temple Devasthanbam 100

அவர் மறைத்துகொண்டு வந்த 112 அமெரிக்க டாலர்களையும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அப்போது பறிமுதல் செய்தனர். பிறகு இந்த வழக்கில் ரவிக்குமாரும், அவரது குடும்பத்தினரும் திருப்பதி மற்றும் சென்னையில் வாங்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் சொத்துக்களை திருமலை தேவஸ்தானம் எழுதி பெற்றது.

ரூ.100 கோடி உண்டியல் காணிக்கை

இதற்கு பிறகு , அப்போதைய அதிகாரிகள் சமரசம் ஏற்பட்டதாக கடந்த 2023ல் லோக் அதாலத் தீர்வு சொன்னதால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ரவிக்குமார் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெளிநாட்டு டாலர்களை ரவிக்குமார் பல கட்டங்களாக திருடிய நிலையில் அப்போதைய அதிகாரிகள் மரத்தடியில் பஞ்சாயத்து போல, அதிகாரிகளும், போலீசாரும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

திருப்பதி கோயில் நாமம்

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் உறுப்பினராக பொறுப்பேற்ற பாஜகவை சேர்ந்த பானுபிரகாஷ், கடந்த ஆட்சியில் நடந்த உண்டியல் காணிக்கை திருட்டை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, லோக்அதாலத்தில் தீர்வு காணப்பட்ட வழக்கை மறுபடியும் விசாரிக்க ஐகோர்ட் அனுமதிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவஸ்தான நடவடிக்கைகளை தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன்பு இம்மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு லோக்அதலாத் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அனைத்து ஆவணங்களையும், அதாவது

வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், பழைய அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மான நகல் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி கோயிலை அரசியலுக்காக பயன்படுத்துவதா? என்று ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் - பாஜக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது..

திருமலை திருப்பதி கோயில் ஊழியர்கள்

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில், "கடந்த 2023 ஏப்ரல் மாதம் ஸ்ரீவாரி ஹம்பியின் உண்டியல் பணத்திலிருந்து அமெரிக்க டாலர்களை திருமலை திருப்பதி கோயில் ஊழியர்கள் திருடினார்கள்.. இதுகுறித்து வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட்டு, கோயில் உண்டியலில் திருடி சேர்த்ததாக, குற்றம் சாட்டப்பட்டவருக்கும், அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ.14.43 கோடி மதிப்புள்ள சொத்துகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கிறது.. ஆனால் வேண்டுமென்றே சந்திரபாபு நாயுடும், லோகேஷ் இருவரும் உண்மையை திரித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருப்புகிறார்கள்.. இது கடவுள் வெங்கடேஸ்ராவின் பெயரை, அவர்களது மோசமான அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது,.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

மேலும், இதுபோன்ற ஒரு திருட்டு, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் நடந்திருந்தால், மீட்கப்பட்ட சொத்துக்கள் திருப்பதி திருமலைக்கு சென்றிருக்குமா? இல்லை தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்றிருக்குமா?

இங்கு மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் எப்படி ஆன்மீக தலங்களின் பெயர்களை, அவரது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை புனைகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும், புரிந்து கொள்ளவும் வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+