மாட்டுக்கொழுப்பு லட்டு.. திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்ட இழுக்கு! தொடங்கிய "சாந்தி யாகம்".. என்ன நடக்குது
திருப்பதி: திருப்பதியில் மாட்டுக்கொழுப்பு லட்டு பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க இந்துக்கள் இடையே அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பலரும் இந்த சம்பவம் காரணமாக கொதித்து போய் உள்ளனர்.
இதை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அங்கே சாந்தி யாகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 'சாந்தி யாகம்' கோயிலில் நடத்தப்பட உள்ளது.

இதற்காக தனியாக உள்ள யாக சாலையில் ஜீயர்கள் யாகம் செய்ய உள்ளனர். கோவில் தலைமை பூசாரியும் யாகத்தில் கலந்து கொள்வார். அதேபோல் சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் இணைந்து 'சாந்தி யாகம்' நடத்த உள்ளனர்.
மாட்டுக்கொழுப்பு சர்ச்சை: திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகி உள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புகார் என்ன?: 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் மிகவும் புனிதமான கோவில்.
ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ரிசல்ட் சொல்வது என்ன?: இதற்காக அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும்.
இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பீன் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம்.
சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு
சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி
சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது.
பசு மாட்டை தவிர வேறு மாட்டின் நெய்யை பயன்படுத்தினால், மாட்டிற்கு அதீத தீவனம் கொடுத்தால் அல்லது மாட்டிற்கு மிக குறைவாக தீவனம் கொடுத்தால் கூட அதன் நெய்யில் இருக்கும் கொழுப்பு இந்த மாதிரி தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புகள் உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications