திருமலை திருப்பதியில் வாகனங்களுக்கு திடீர் தடை? "புது ரூட்டை" வெளியிட்ட தேவஸ்தானம்.. என்னாச்சு?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் கருட சேவையை முன்னிட்டு இரண்டு மலைப்பாதைகளிலும், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முக்கிய அறிவிப்பும் பக்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது... அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது...

ஏழுமலையான்: இதில், முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கருடசேவைக்கு, திருமலைக்கு ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாகும்.. எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
மலைப்பாதை: அதே சமயம் பக்தர்களின் பாதுகாப்புக்காக வழக்கமான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அந்தவகையில், கருட சேவையை முன்னிட்டு அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல், 9-ம் தேதி காலை 6 மணி வரை திருமலைக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்கூட்டியே பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்த எந்த பகுதியில் நிறுத்தலாம் என்பது குறித்து அறிவதற்காக கியூ.ஆர் குறியீடு பொருத்தப்பட்ட பலகைகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள்..
சிறப்பு ஏற்பாடுகள்: அதன்படி அலிபிரி பாரத வித்யா பவன், நேரு மாநகராட்சி பள்ளி மைதானம், விநாயகா நகர் குடியிருப்பு, எஸ்.வி வைத்திய கல்லூரி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.. சுற்றுலா பஸ்களை, உயிரியில் பூங்கா சாலையில் உள்ள தேவ லோக் மைதானத்திலும், பைக்குகளை, பாலாஜி இணைப்பு பஸ் நிலையத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் இடங்களை அறிவதற்காக ரூயா, கருடா, கூடலி, பாலாஜி லிங்க் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கியூ.ஆர் குறியீடு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் அவற்றை சென்றடையும் வழிகள் பற்றிய விவரங்கள் உள்ளது.
அறிவுறுத்தல்: எனவே, பக்தர்கள் கியூ.ஆர் குறியீட்டை பயன்படுத்தி வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications