திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு போறீங்களா? இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருங்க.. பரபரப்பு சம்பவம்! கவனம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவிலுக்கு தினம் லட்சக்கணக்கில் மக்கள் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகவும் பணக்கார கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிலும் திருப்பதி கோவில் தினம் தினம் கோடி கோடியாக வருமானம் ஈட்டும் கோவில் ஆகும். பக்தர்கள் அதிகம் விரும்பும், தினமும் பல வேண்டுதல்களை மேற்கொள்ளும் கோவிலாக திருப்பதி கோவில் உள்ளது.
கோவில் வருமானம்: இங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை, உண்டியல் வரவு, சிறப்பு நகை வைர காணிக்கை, வரிசை கட்டணம், நிதி உதவி மூலம் பல கோடிகளை திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானமாக பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் குறைந்திருந்த வருமானம் தற்போது மீண்டும் அங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக மக்கள் கோடி கோடியாக உண்டியலில் பணத்தை அள்ளி இங்கே கொட்டி வருகிறார்கள்.
இந்த கோவிலில் தினமும் 30 லட்சம் ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் உண்டியலில் போடப்படுகிறது. இதை தனியாக பிரித்து எண்ணுவதே மிகப்பெரிய வேலையாக உள்ளது. தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் அதிக அளவில் சில்லறை காசுகளை போடுகிறார்கள்.
அதிர்ச்சி சம்பவம்: இந்த நிலையில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை அலிபிரி மலைப்பாதையில் கரடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் சிறுத்தை ஒன்று இதே நடைபாதையில் வந்து 4 வயது சிறுவனை தாக்கியது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை இதே பாதையில் சிறுத்தை வந்துள்ளது. கருப்பு நிற சிறுத்தை கம்பி வடத்தை தாண்டி உள்ளே நடந்து சென்றுள்ளது.
இது அங்கே இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கரடி அப்படியே வேகமாக உள்ளே நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. அந்த நேரம் பார்த்து நடை மூடப்பட்டு இருந்ததால் அங்கே மக்கள் யாரும் இல்லை. இதனால் அங்கே மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த நிலையில் அங்கே மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. கரடிகள் வருகையை தடுக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
சில்லறை: இன்னொரு பக்கம் திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது சில்லறைகள் இருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. அங்கே உண்டியலில் போடப்படும் சில்லறை காசுகள் வங்கிகளில் காசுகள் கொடுக்கப்பட்டு பணமாக மாற்றப்பட்டு கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப நாட்களில் அதிக அளவில் சில்லரைகள் வருவதால் அதை வங்கிகள் வாங்க மறுக்கின்றன. இவ்வளவு சில்லறைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று வங்கிகள் மறுத்து வருகின்றன.
வங்கிகள் ஏற்க மறுப்பதால் இதை என்ன செய்வது என்று தெரியாமல் திருப்பதி தேவஸ்தானம் குழப்பத்தில் உள்ளது. மூட்டை மூட்டையாக அலுவலகத்தில் சில்லறைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. தினசரி கோவில் செலவினங்கள், கோவிலுக்கு சொந்தமான பிரசாத கடைகள், தேவஸ்தான விடுதிகளில் இந்த சில்லறைகளை இனி பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications