வைகுண்ட ஏகாதசி! திருப்பதி ஏழுமலையானை காண 1.40 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ்! 5 நிமிடத்தில் ஹவுஸ்ஃபுல்
திருப்பதி: திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ரிலீஸ் செய்தது. மொத்தம் 1.40 லட்சம் டிக்கெட்டுகளும் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன.
ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனத்தை பக்தர்கள் கண்டு களிக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன்களை பெற்றுள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக முதியோர், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் ரூ 300 சிறப்பு தரிசனமும் இருக்காது. அனைத்து பக்தர்களும் சர்வ தரிசனம் மூலமாகவே ஏழுமலையானை தரிசிப்பார்கள். டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில மட்டுமே திருமலைக்கு பக்தர்கள் வர வேண்டும்.
அப்படி வந்தால் அவர்களுக்கான காத்திருக்கும் நேரம் குறையும். முன்னாள் தேவஸ்தான அறங்காவலர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் யாருமே வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனங்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்காக 10 நாட்கள் வரை 3000 ஸ்ரீவாரி தன்னார்வ தொண்டு சேவகர்கள் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சேவை செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து வைணவ தலங்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படும். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாசன் கோயில் உள்ளிட்ட இடங்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதன்வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து கோயில்களிலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படும். இந்த நேரத்தில் பெருமாள் மகிழ்ச்சியாக இருப்பார். அதனால் அவரிடம் என்ன வேண்டினாலும் அது கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த சொர்க்க வாசல் துவாரம் வழியாக ஏழுமலையானை தரிசிக்க இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகள் ரிலீஸானது. மொத்தம் இந்த 10 நாட்களுக்கு அதாவது ஜனவரி 10-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 1.40 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸாகின. அவற்றில் மொத்த டிக்கெட்டுகளும் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ 300 ஒரு டிக்கெட் என விற்பனை செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications