விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம்.. திருப்பூரில் கொந்தளிக்கும் 13 மாவட்ட விவசாயிகள்
திருப்பூர்: விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கோவை ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். காத்திருப்பு போராட்டம் என்பது மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகளிடம் அனுமதி பெறாமலேயே காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதை எதிர்த்து திருப்பூர் கள்ளிபாளையம் பகுதியில் 3வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். உயர்அழுத்த மின்சார கோபுரம் மாதிரி ஒன்று கொண்டுவரப்பட்டு, அதில் விவசாயிகள் ஏறி அந்தரத்தில் தொங்குவது போன்று செய்து காண்பிக்கப்பட்டு இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
விவசாயிகள் நிலத்தின் கேட் மற்றும் பூட்டை உடைத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி உள்ளே செல்கிறார்கள். கடுமையான அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை பின்பற்றப்படுகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையிலும் கூட, அதை கண்டுகொள்ளாமல் நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தொடங்கி மூன்று ஆண்டு காலம் ஆகிறது.
சாலையோரமாக தரைக்குகீழே, கேபிள் பதித்து செல்லுமாறு நாங்கள் கூறிய மாற்று யோசனையை மாவட்ட கலெக்டர்களிடம் முன்வைத்துள்ளோம். அதற்கு பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும்கூட, எந்த முடிவையும் அறிவிக்காமல் காவல்துறையும், வருவாய்த்துறையினரும் மின் கோபுரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications