மழைக்கு ஒதுங்கிய போது நடந்த சோகம்.. திருப்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழையில் நனையாமல் இருப்பதற்காக ஒதுங்கிய போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே சமுதாய நலக்கூடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அதே பகுதியை சேர்ந்த பலர் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்துள்ளனர். லேசான மழை பெய்து வந்ததால், சில பயணிகள் அந்த சமுதாய நலக்கூடத்தில் நின்றுள்ளனர்.

அப்போது திடீரென சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் வேலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த முரளி ராஜா, கவுதம், மணிகண்டன் ஆகிய பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமுதாய நலக்கூடம் பழைய கட்டிடமாக இருந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. திருப்பூர் அருகே பஸ்சுக்காக காந்திருந்த பயணிகள் 3 பேர் சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications