2 சிறுமி 9 பேர்..திருப்பூரை திணற வைத்த சம்பவம்! 14,15,16 வயசு அக்யூஸ்ட்! கூர்நோக்கு இல்லத்தில் பரபர
திருப்பூர்: தமிழகத்தையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சிறுமி கூட்டு பாலில் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒரு சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் வசிக்கும் 17 வயதான ஒரு சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்திருக்கிறார். பெற்றோர் இல்லாத அந்த சிறுமியை அவர்கள் இருவரும் அன்போடு வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமியின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது

அவ்வப்போது மயக்கம் அடைவது வாந்தி எடுப்பது என இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாத்தா அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அதில் சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சி சம்பவம்: இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற அவரது உறவினர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். அதில் தன்னை 3 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை கூறினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்த ஜெய காளீஸ்வர், மதன்குமார், பரணி குமார், பிரகாஷ் நந்தகோபால், பாவா பாரதி மற்றும் 14,15,16 வயதுடைய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
9 பேர் கைது: இவர்கள் அனைவருமே அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆறு பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் திருப்பூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். வழக்கில் திடீர் திருப்பமாக இதே கும்பலால் மேலும் ஒரு சிறுமியும் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அத்துமீறல்: இந்த கும்பல் மேலும் பலரிடம் அத்துமீறி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சிறுமிகளை காதலிப்பது போல் நடித்து அவர்களை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக இவர்கள் வைத்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் சிறுமியை வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கும் பகிர்வதை இந்த கும்பல் வழக்கமாக வைத்திருக்கிறது. இதை அடுத்து குறிப்பிட்ட அந்த விடுதியில் போலீசார் சோதனை நடத்தி இருக்கின்றனர்.
மேலும் பலர் கைதாகலாம்: சிறுவர்களையும் சிறுமிகளையும் எப்படி அனுமதித்தார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மேலும் பலர் கைதாகலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரகாஷ் என்ற இளைஞரின் வீட்டிலும் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் மேலும் பலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி: இந்த நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களில் ஒருவன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூர்நோக்கு இல்லத்தில் நேற்று இருந்து அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த சிறுவர்களில் ஒருவன் அங்கிருந்த சோப் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதை அடுத்து மற்ற சிறுவர்கள் இதுகுறித்து வார்டனிடம் தெரிவித்ததையடுத்து அவர் காவல்துறை மூலம் மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications