திருப்பூரில் ஹாரன் அடித்த தனியார் பஸ் டிரைவர்.. கீழே இழுத்து போட்டு புரட்டி எடுத்த போதை இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் சாலையில் சென்ற தனியார் நகர பேருந்து முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது இதனால் ஓட்டுனர் ஹாரன் அடித்து அவர்களை ஒதுங்கி செல்லுமாறு தெரிவித்துள்ளார் மது போதையில் இருந்த இளைஞர்கள் பேருந்தை நீலி பிரிவு அருகே வழி மறித்து ஓட்டுநரை பேருந்தில் இருந்து கீழே இழுத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

இதனிடையே ஓட்டுநர் தாக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் உடனடியாக ஓட்டுநரை அவர்களிடமிருந்து மீட்டனர். ஆனால் போதை இளைஞர்கள் பிறந்தை எடுக்க விடாமல் கடுமையாக தகராறில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் பயணிகள் மற்றும் மற்ற பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள் இணைந்து போதை இளைஞரை அப்புறப்படுத்தினார்கள். போதை இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தை வழிமறித்து போதை இளைஞர்கள் ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

a group of intoxicated youths assaulted a private bus driver for honking his horn In Tiruppur


பனியன் நிறுவனத்தில் கொத்தடிமைகள்

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்ததாக 4 குழந்தை தொழிலாளர்கள் உட்பட 13 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் கவுண்டநாயக்கன்பாளையம் சாலையில் உள்ள பனியன் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி, திருநெல்வேலி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை புரிந்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த நிறுவனம் சம்பளம் தராமல் சிலரிடம் வேலை வாங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில், திருப்பூர் ஆர்.டி.ஓ. சிவபிரகாஷ், வடக்கு தாசில்தார் கோவிந்தசாமி, வடக்கு காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 6 இளம்பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதில் 4 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 13 பேரின் வயது, பணிபுரிந்த காலம், வேலை நேரம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சேகரித்த அதிகாரிகள், தங்குமிடம், உணவு மற்றும் சம்பளம் முறையாக வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்தனர. மேலும், நிறுவன உரிமையாளர் சிவக்குமாரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அதேபோல் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டதற்கான காரணம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+