திருப்பூர், கோவை, நாமக்கல்லுக்கு கொட்டும் பணமழை.. இயற்கையாகவே நடந்த பெரிய மாற்றம்
திருப்பூர்: தமிழ்நாட்டில் சென்னை மண்டலம் எப்படி ஆட்டோ மொபைல் மற்றும் என்ஜினியரிங், ஐடி துறையில் பலமாக உள்ளதோ, கொங்கு மண்டலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளி ஏற்றுமதி, முட்டை ஏற்றுமதி, தென்னை ஏற்றுமதி, கறிகோழி ஏற்றுமதியில் பலமாக உள்ளது. தற்போது, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு மக்களுக்கு இயற்கையாக நடந்த மாற்றத்தால் பணம் கொட்டி வருகிறது. தென்னை விவசாயிகளும், முட்டை உற்பத்தியாளர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை விவசாயம் பல்வேறு மாவட்டங்களில் பிரதானமாக இருக்கிறது. அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் இருப்பது இல்லை.. ஒரு முறை பெரிய அளவில்லாபம் கிடைத்தாலும், மறுமுறை பெரிய நஷ்டம் ஏற்படும். ஆனால் எதார்த்ததில் விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை.. அதனால் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பை உப தொழிலாக விவசாயிகள் செய்து வாழ்வாதரம் பெற்று வருகிறார்கள்.

கொங்கு மண்டலம்
ஆனால் அதேநேரம் கோவை,ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப்பகுதிகள் தனித்துவமான தொழில் மற்றும் விவசாய முறைகளால் லாபம் சம்பாதிக்கின்றன. அதேபோல் வேலூர் ஜில்லாவை பொறுத்தவரை தோல் தொழிற்சாலைகள், சென்னையை பொறுத்தவரை ஐடி, ஆட்டோ மொபைல், என்ஜினியரிங், மொபைல், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் பணம் கொட்டுகிறது. மற்ற பகுதிகளை பொறுத்தவரை பெரும்பாலும் விவசாயம் தான்.
யாருக்கு லாபம்
இந்நிலையில் தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகள், முட்டை கோழி வளர்ப்பவர்களுக்கு இயற்கையாகவே நடந்த பெரிய மாற்றத்தால் தற்போது பணமழை கொட்டி வருகிறது. தேங்காய் விலை பலமாதங்களாகவே குறையவே இல்லை.. இளநீர், தேங்காய், கொப்பரைதேங்காய் என எல்லாமே தற்போது அதிகமான விலை விற்கிறது. விலை குறைய வாய்ப்பு இன்றைய சூழலில் குறைவு. ஏனெனில் அந்த அளவிற்கு தேவை அதிகமாக உள்ளது.
மானவாரி நிலங்களில் தென்னை சாகுபடி
எனவே தேங்காய் அதிகம் விளையும், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, தேங்காய் விளைவித்த விவசாயிகள் எல்லாருமே தற்போது நல்ல வருமானத்தில் இருக்கிறார்கள். இதை பார்த்த பல்வேறு விவசாயிகள் தற்போது மானாவாரி நிலங்களில் தென்னை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகளை மானிய விலையில் வழங்குகிறது. வைகை அணை பண்ணையில் ஒட்டு வீரிய தென்னை, நாட்டு தென்னையும் விற்பனை செய்து வருகிறது.
தென்னையில் 45 நாளுக்கு ஒரு முறை லாபம்
தென்னையை நன்கு பராமரித்து வந்தால் 45 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் விளைச்சலை எடுக்க முடியும். ஒரு மரத்தில் 40 முதல் 60 காய்கள் வரை கிடைப்பதால் நிரந்தர வருமானம் கிடைக்கும். தேங்காய் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதையொட்டி மற்ற பயிர்களை சாகுபடி செய்வதை விவசாயிகள் கைவிட்டு, தற்போது தென்னை சாகுபடியில் தீவிரம் காட்சி
தேங்காய் விலை அதிகரிப்பு
தற்போதைய நிலையில் இளநீர் 1 ரூ.25 முதல் ரூ.30 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்குகின்றனர். அதேபோல் ஒரு தேங்காய் ரூ.55 முதல் ரூ.60 வரை விலை உள்ளது. வியாபாரிகள் சில்லரையில் கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் எப்போதும் பலன் தரும் தென்னை மரக்கன்றுகளை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வந்துள்ளனர். தேங்காய் தற்போது தமிழ்நாட்டில் பணப்பயிராக இருக்கிறது.
முட்டை விலை என்ன
மறுபுறம், கோழி வளர்ப்பும், முட்டை கோழி வளர்ப்பும் நல்ல லாபரமானதாக மாறி உள்ளது. குறிப்பாக முட்டை விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டைக்கு 6 ரூபாய் 25 காசுகள் ஆக உயர்ந்துள்ளது; இதனால் கடைகளில் ஒரு முட்டையின் விலை ₹8 முதல் ₹10 வரை விற்கப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த விலையை நிர்ணயித்துள்ளது.
முட்டை விலை உயர்வால் பண மழை
முட்டை விலை பொதுவாக கார்த்திகை மற்றும் மார்கழிமாதங்களில் குறையும். சபரிமலை, பழனிக்கு விரதம் இருப்பார்கள் என்பதால் அசைவம் விலையே அடியோடு குறையும். ஆனால் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக முட்டை விலை குறையவே இல்லை..அதுமட்டுமல்ல முட்டை தேவை இந்தியா முழுவதுமே அதிகரித்துள்ளது. அதனால் முட்டை தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் முட்டை கோழி வளர்ப்பவர்களுக்கும் பணம் கொட்டி வருகிறது.
-
திருப்பூரில் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த 27 வயது காமுகன்.. 75 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட நடுக்கம் -
திருப்பூர் செருப்புக்கடை ஊழியர் 28 வயதில் இப்படியொரு முடிவு.. பல்லடம் மேம்பாலத்தில் நடந்தது என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications